ஐ.நா.வின் செயற்பாடுகள் நம்பிக்கை தரக் கூடியதாக இல்லை : வெளிவிவகார அமைச்சர் இத்தாலியில் தெரிவிப்பு

Published By: Digital Desk 4

13 Sep, 2021 | 10:01 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஐ.நா மனித உரிமை பேரவையின் கோட்பாடுகள் இன்று பின்பற்றப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயற்பாடுகள் நம்பிக்கை தர கூடியதாக இல்லை என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், உலகத்தில் ஒரு பகுதிக்காக அல்ல அனைத்துலக நாடுகளுக்குமானதாக இந்த அமைப்பு அமைய வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இத்தாலியில் இடம்பெறும் ஜி20 சர்வமத மாநாட்டின் பக்க நிகழ்வாக இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற  வெளிவிவகார கொள்கை மற்றும் மதம் என்ற தொனிப்பொருளிலான வெளிவிவகார அமைச்சர்களின் கலந்துரையாடலின் போதே பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

மதம் மற்றும் வெளிவிவகார கொள்கை என்பவை குறித்து கவனத்தில் கொள்ள வேண்டிளது இன்று முக்கியமாகின்றது.  வெளிவிவகார கொள்கை வகுப்பில் ஐக்கியப்பட வேண்டும்.

பிளவுப்பட்டு அல்லது கடுமையான நிலைப்பாட்டிலிருந்தோ அதனை செய்ய இயலாது. புவிசார் அரசியல் மற்றும் கலாசார வேறுப்பாடுகளுடன் அணிசேரா அமைப்பில் இணைந்து செயற்பட்டால், அரசியலுடன் மதம் கலந்துள்ளமையானது சிறந்த விடயமாக கருத முடியாது.

இது வெளிவிவகார கொள்கைகளில் தாக்கம் செலுத்தும்  மறுப்பும் உள்ள கொள்கை வகுப்புகளுக்கும் சவால்களை ஏற்படுத்துகின்றது.

ஐ.நா மனித உரிமை பேரவையின் கோட்பாடுகள் இன்று பின்பற்றப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின்செயற்பாடுகள் நம்பிக்கை தர கூடியதாக இல்லை.

அங்குள்ள விதிமுறைகள் ஆதிக்கப்போக்கில் கடும்போக்குவாத நாடுகள் பயன்படுத்திக்கொள்கின்றன. இந்த நிலையானது எம்மை போன்ற நாடுகளுக்கு பெரும் சவாலாகின்றது.

அனைத்துலக கொவிட் தொற்றினால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுற்றுலாத்துறை 4.2 பில்லியன் டொலர் வருவாயை இழந்துள்ளது.

ஏனைய துறைகளும் அவ்வாறானதொரு நிலையிலேயே உள்ளது. எனவே  ஐக்கிய நாடுகள் சபையை கடும்போக்குவாத நாடுகள் தமது தேவைகளுக்கு பயன்படுத்துவதாகி விட கூடாது. உலகத்தில் ஒரு பகுதிக்காக அல்ல அனைத்துலக நாடுகளுக்குமானதாக இந்த அமைப்பு அமைய வேண்டும் என தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01