பலிக்கடாவாகுமா பாகிஸ்தான்?

Published By: Digital Desk 2

13 Sep, 2021 | 09:16 PM
image

லோகன் பரமசாமி

கட்டார் தலைநகரம் டோஹாவிற்கு வந்திறங்கிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டணி பிளிங்கன் அங்கே நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் உரையாற்றும்போது, “இறுதியாக காபூலில் இருந்து அனைத்து  இராணுவமும் வெளியேறி விட்ட நிலையில் ஆப்கானிஸ்தானை கையாளும் விவகாரத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை ஆரம்பித்து வைக்கின்றோம்” என்று அறிவித்தார்.

அத்துடன் “எமது இராணுவப்பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில் இப்பொழுது எமது இராஜதந்திரப் பணிகள் ஆரம்பித்துள்ளன” எனவும் அவர் தெரிவித்தார். 

மேலும் “ஆப்கானிஸ்தானில் இயங்கி வந்த அமெரிக்க தூதரகம் கட்டாருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது” என்றும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அறிவித்தார். 

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை அழிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இரண்டு தசாப்த கால இராணுவ நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்த நிலையில் அமெரிக்க இராணுவம் வெளியேறி உள்ளது. 

ஆனால் இராஜாங்கச் செயலாளரின் கருத்தின் படி அமெரிக்கா இன்னமும் அந்தப் பிராந்தியத்தை விட்டு வெளியேறுவதில்லை என்பது மிகத் திடமாகவே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

ஆப்கானிஸ்தானிய பிராந்தியத்தில் உள்ள வல்லரசுகள் ‘பிராந்திய அமைதியை’ நிலைநாட்ட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளன. அதேவேளை கட்டாரில் மிகப் பெரிய அமெரிக்க படைத்தளமொன்று உள்ளது.

அண்மைய காலத்தில்  அமெரிக்க ஆதரவு ஆப்கானிஸ்தானியர்களை ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றவதில் கட்டார் மிக முக்கிய பங்கு வகித்திருந்தது. இனிவரும் காலத்தில் ஆப்கானிஸ்தான் விவகாரங்கள் குறித்த பேச்சுகளும் நகர்வுகளும் மேற்கு நாடுகள் சார்பாக கட்டாரின் ஊடாக இடம்பெறவிருப்பதாகவும் அறிய முடிகிறது. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-12#page-8

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13