மீண்டும் வெளிநாட்டுப் பயணம் ஆரம்பம் 

Published By: Digital Desk 2

13 Sep, 2021 | 05:36 PM
image

குமார் சுகுணா

கொரோனா பரவல் காரணமாக பல  மாதங்களாக  வெளிநாட்டு பயணம் போக முடியாமல் இருந்த  பிரதமர் மோடி மீண்டும் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளார். எதிர்வரும் 22ஆம் திகதி டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார். 

2014ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராக மோடி பதவியேற்றார். அந்த ஆண்டின் ஜுன் 15 முதல் 2019ஆம் ஆண்டு வரையில் பிரதமர் மோடி 96 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதில், 2014ஆம் ஆண்டு 9 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட மோடி 2015 ஆம் ஆண்டு 23 நாடுகளுக்கும், 2016ஆம் ஆண்டு 17 நாடுகளுக்கும் அடுத்த ஆண்டுகளில் 14 நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார்.

கடந்த, 2017-ஆம் ஆண்டு 14 வெளிநாட்டு பயணங்களும், 2018-ஆம் ஆண்டு 23 வெளிநாட்டு பயணங்களும், 2019-ஆம் ஆண்டு 15 வெளிநாட்டு பயணங்களும் மேற்கொண்டுள்ளார். 1 முறை 35 நாடுகளுக்கும், 2 முறை 15 நாடுகளுக்கும், 3 முறை 2 நாடுகளுக்கும், 4 முறை 4 நாடுகளுக்கும், 5 முறை 3 நாடுகளுக்கும், 6 முறை 1 நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். 2020-ஆம் ஆண்டு பிரதமருக்கு வெளிநாடு பயணம் இல்லாத ஆண்டாக மாறியது.

இந்நிலையில் செப்டம்பர் 22ஆம் திகதி டில்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்கிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி எதிர்வரும் 23ஆம் திகதி ஜனாதிபதி  ஜோ பைடனை சந்தித்து பேசுகிறார். ஆப்கானிஸ்தான் நிலவரம், சீனாவுடனான எல்லை பிரச்சினை உள்ளிட்ட விவகாரம் குறித்து ஆலோசிக்கிறார். செப்டம்பர் 24ஆம் திகதி  ஜப்பான், அவுஸ்திரேலிய நாட்டு தலைவர்களையும் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசுகிறார்.

இந்திய பிரதமர்களில்  பிரதமர் மோடியே வெளிநாட்டு பயணங்களுக்கு அதிகமாக  செலவழிப்பதாக  எதிர் கட்சிகள் விமர்சிக்கின்றன. 5 வருடங்களில்  58 நாடுகளுக்கு பயணித்த பிரதமர் மோடி அதற்காக  ரூ.517.82 கோடி செலவு செய்ததாக  பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் குறித்து வெளியுறவுத்துறை தகவல் வெளியிட்டிருந்தது.

2015 மார்ச் முதல் 2019 நவம்பர் வரை  பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணம் குறித்து மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு வெளியுறவு அமைச்சர் வி.முரளீதரன் எழுத்துப்பூர்வமாக  கடந்த வருடம் அளித்த பதிலில் கூறியதாவது,

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஐந்து ஆண்டுகளில் 58 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். பிரதமரின் வெளிநாட்டு பயணத்திற்கு ரூ. 517.82 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 2015 முதல், பிரதமர் 58 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்’’ என கூறினார். இந்த பயணங்களின்போது இந்தியா கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் மற்றும் ஒப்பந்தங்களின் விவரங்களுடன் 2015 மார்ச் முதல் 2019 நவம்பர் வரை பிரதமர் மோடி பார்வையிட்ட நாடுகளையும் அவர் பட்டியலிட்டார்.

பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்தால் ஏற்பட்ட நன்மைகள் குறித்த கேள்விக்கு, இந்த பயணங்களால் வர்த்தகம் மற்றும் முதலீடு, தொழில்நுட்பம், கடல்சார், விண்வெளி மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வெளிநாட்டு நாடுகளுடன் இந்தியா உறவை பலப்படுத்தியுள்ளன. இவை நமது மக்களின் பொருளாதார வளர்ச்சியையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதற்காக இந்தியாவின் தேசிய வளர்ச்சியில்முக்கிய பங்களித்தன. காலநிலை மாற்றம், நாடுகடந்த குற்றங்கள் மற்றும் பயங்கரவாதம், இணைய பாதுகாப்பு மற்றும் அணு பரவல் அல்லாதவை உள்ளிட்ட பலதரப்பட்ட மட்டத்தில் உலகளாவிய நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பதில் இந்தியா இப்போது அதிகளவில் பங்களிப்பு செய்து வருகிறது.

மேலும் சர்வதேச கூட்டணி போன்ற உலகளாவிய பிரச்சினைகளுக்கு அதன் சொந்த தனித்துவமான முயற்சிகளை உலகுக்கு வழங்குகிறது என்று அவர் கூறினார். சுய விளம்பரம் மற்றும் செல்பிக்களுக்காக பிரதமர் மோடி வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டார். பொதுமக்களின் பணத்தை செலவழித்ததாக எதிர்க்கட்சிகள் மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக கடந்த வருடம் அவர் எந்த வெளிநாட்டுக்கும் சுற்றுப்பயணம்  மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளமையால் மீண்டும் அவர் வெளிநாட்டுக்கு அதுவும் அமெரிக்காவிற்கு  பயணிக்க உள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21
news-image

ஒரே புள்ளியில் அமெரிக்கா - இந்தியா

2024-04-15 18:24:18