2020இல்  இலங்கையின் ஊடக சுதந்திரம் 

Published By: Digital Desk 2

13 Sep, 2021 | 12:41 PM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

2019 ஆம்  ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு இலங்கையின் மீது   மேற்குலக நாடுகள்  தமது பார்வையை அதிகமாக  திருப்பியதை மறுக்க முடியாது.அதேவேளை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தும்சர்வதேச குழுக்களும் அமைப்புகளும் இலங்கையின் ஊடகப் போக்குக் குறித்து அதிகம்கவனம் செலுத்தத் தொடங்கின. இதற்கு என்ன காரணங்கள் என்பதை விரிவாகக்கூறத்தேவையில்லை. 

இலங்கையின் ஊடக சுதந்திரம் குறித்து குரல்கொடுத்து வரும் இலங்கை சுதந்திர  ஊடக இயக்கமானது 2019 ஆம் ஆண்டின் இறுதியில்ஊடகவியலாளர்களுக்கு எதிரான  30  பாரிய குற்றங்களைஅடையாளப்படுத்தி பகிரங்கப்படுத்தினாலும் அதற்கான நீதி இன்று வரை மறுக்கப்பட்டேவருகின்றது. 

இந்நிலையில் மேற்படி இயக்கமானது 2020 ஆண்டு ஜனவரிமுதல் டிசம்பர் வரை இலங்கையில் நிலவிய ஊடக சுதந்திரம், ஊடகவியலாளர்களுக்கும் ஊடகநிறுவனங்களுக்கும் , ஊடக பணியாளர்களுக்கும்  எதிராக மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தல்கள், அதுதொடர்பான முறைப்பாடுகள் ஆகியவற்றை தொகுத்து ‘இலங்கையில் ஊடக சுதந்திரம் –2020’சம்பவம் மற்றும் போக்குகள் என்ற தலைப்பில் ஆண்டறிக்கை ஒன்றை அண்மையில்வெளியிட்டிருந்தது. 

2021 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி உலகபத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு இதை வெளியிட முயற்சித்தாலும் நாட்டின்சூழ்நிலை காரணமாக முழுமையானதோர் அறிக்கையாக தற்போதே இது வெளியிடப்பட்டுள்ளது.  புதுடெல்லியில் அமைந்துள்ளதெற்காசிய பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக உள்ள சட்டத்தரணி விரஞ்சன ஹேரத்கடந்த ஆண்டின் ஊடக போக்குகள் குறித்து ஆராய்ந்துள்ளார். 

ஒவ்வொரு வருடமும் நாட்டின் ஊடக சுதந்திரம் பற்றியநிலைமைகளை வருடாந்த அறிக்கையாக கொண்டு வருவதற்கான ஒரு முதல் முயற்சியே இதுவன்றிஇதுவொரு பூரண மதிப்பீடு அல்ல என்று கூறுகிறார் சுதந்திர ஊடக இயக்கத்தின்அழைப்பாளரும் சிரேஷ்ட எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளரான சீதா ரஞ்சனி.  

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-12#page-6

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41