இறந்த நிலையில் கரை ஒதுங்கிய  அரிய வகை இராட்சத புள்ளி சுறா (காணொளி இணைப்பு)

Published By: Priyatharshan

14 Sep, 2016 | 04:27 PM
image

(இராமேஸ்வரத்திலிருந்து ஆ.பிரபுராவ்)

பாம்பன்  அருகே குந்துக்கால் கடற்கரை கிராமத்தில் இறந்த நிலையில் இராட்சத புள்ளிசுறா ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.

இதனை கண்ட கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய புள்ளிசுறாவை உடல்கூற்று சோதனை செய்து  மணலில் புதைத்தனர். 

  

உலகிலேயே அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் அதிகம் வசிக்கும் பகுதி மன்னார்வளைகுடா கடற்பகுதியாகும். 

இந்நிலையில் குந்துகால் கடற்கரையில் சுமார் 1500 கிலோ எடையும் 17 அடி நீளமும் கொண்ட அரியவகை புள்ளிசுறா ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

இறந்த புள்ளிசுறா நோய் வாய்ப்பட்டு அல்லது பெரிய அளவிளான சரக்குக்கப்பலின்  இயந்திரத்தில் அடிபட்டு இறந்திருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள்  தெரிவித்தனர். 

மேலும் ஆழ்கடல்பகுதியில் வசிக்கக்கூடியது எனவும் சங்கு வகைகள் மற்றும் அதிக முட்பகுதிகொண்ட இன மீன்களை உணவாக உட்கொள்ளும் தன்மையுடையது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52