சாத்தியமாகாது போன மஹிந்த பாப்பரசர் சந்திப்பு

Published By: Digital Desk 2

13 Sep, 2021 | 12:40 PM
image

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் உம் இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கின்றனர்.சர்வதேச மாநாடு ஒன்றில் பங்கேற்கவே இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது.  ஆரம்பத்தில் இருவரும் இத்தாலிக்கான விஜயத்தின்போது பரிசுத்த பாப்பரசரைச் சந்தித்து பேச்சுவார்த்தைநடத்துவதாகவும் அதன்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விவகாரம் தொடர்பான விசாரணைகளின்முன்னேற்றம் தொடர்பாக பாப்பரசருக்கு விளக்கம் அளிப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டது. 

இந்த விடயம் அமைச்சரவை ஊடகவியலாளர்சந்திப்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அது தொடர்பாக கடுமையான எதிர்ப்பைபேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்டிருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் குறித்த பொய்யான தகவல்களையும்தவறான விளக்கங்களையும் கூறுவதற்கு பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் இத்தாலி சென்றுபாப்பரசரை சந்திக்கப்போவதாகவும் அதற்கு அனுமதிக்க முடியாது என்றும் கடுமையான காரசாரமானவிமர்சனத்தை கர்தினால் ஆண்டகை  பகிரங்கமாகவேவெளியிட்டிருந்தார்.

  பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் பாப்பரசரை  சந்திக்க கடும் முயற்சிகளை மேற்‍கொண்டதாகவே தெரிவிக்கப்படுகின்றது.பொதுவாக  இவ்வாறான சந்திப்புக்கள் வத்திக்கானில்  இடம்பெறும். அதற்கான ஏற்பாடுகளை வத்திகானுடன் நெருக்கமாகச்செயற்படும் அமெரிக்காவில் வசிக்கும் ஒருவர் ஊடாக அரசாங்கம் முயற்சித்திருந்தது.

எனினும், அந்த முயற்சிகள் படிப்படியாக முன்னேற்றம் கண்டிருந்தபோதும் கர்தினாலின்கூற்றினால் இலங்கை பிரதிநிதிகளை  சந்திப்பதற்குவத்திக்கான் பச்சைக்கொடி காட்டவில்லை. இதனால் தமக்கு ஏற்பட்ட பின்னடை அரசாங்கம் கனகச்சிதமாகமறைப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்தது. 

அதற்காக, பிரதமர் மஹிந்த பாப்பரசரை சந்திக்கும் விடயம் நிகழ்ச்சி நிரலில்உள்வாங்கவில்லை என்று விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையொன்றை ஊடக அறிவிப்பின்மூலம் வெளியிட்டிருந்தது. எவ்வாறாயினும் தற்போது இத்தாலியில் இருக்கும் பிரதமர் மஹிந்தமற்றும் பாரியார் உள்ளிட்ட இன்னும் சில உறவினர்கள் சொற்ப நாட்கள் அங்கிருந்துவிட்டேநாடு திரும்புவதாகவும் தகவல்கள் உள்ளன. 

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-12#page-5

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22