ஆப்கான் தலிபான்கள் சீனா வைத்துள்ள மிகப்பெரிய நம்பிக்கை

Published By: Gayathri

12 Sep, 2021 | 06:43 PM
image

(குளோபல் டைம்ஸ்)

ஆப்கானிஸ்தான் தலிபான் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவர்.கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளில் இருந்து விலகி தமக்களித்த வாக்குறுதிகளை தலிபான்கள் நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கை கொண்டுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சக  பேச்சாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் குறிப்பிடுகையில்,

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் அர்ப்பணிப்பை சீனா கவனித்தில் கொண்டுள்ளது. ஐ.நா பாதுகாப்பு சபை கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தை  சர்வதேச பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ளமை சீனாவுக்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது. 

தேசிய பாதுகாப்பு மற்றும் பிரதேச ஒருமைப்பாடு போன்ற விடயங்களை எப்போதும் கவனத்தில் கொள்கிறோம் என அவர் தெரிவித்தார்.

இதேபோன்று தலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் குளோபல் டைம்ஸ் சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிடுகையில்,  

தோஹா உடன்படிக்கைக்குப் பிறகு கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினர் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தை உறுதியாக எதிர்ப்பது, கட்டுப்படுத்துவது, ஒடுக்குவது மற்றும் ஒழிப்பது சர்வதேச சமூகத்தின் பகிரப்பட்ட பொறுப்பு என சீன வெளிவிவகார பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.  

ஆப்கானிஸ்தான் தலிபான்களுக்கு சீனா தமது எதிர்பார்ப்புகளை  மீண்டும் வலியுறுத்துகிறது.

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம் மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளுடன் உள்ள உறவுகளை தலிபான்கள் முறித்துக் கொள்ளவேண்டும்.  

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் அண்டை நாடுகளுடனான ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்தி பயங்கரவாதத்தை பரப்புவதைத் தவிர்ப்பதோடு  பயங்கரவாதம் வளரும், இருப்பிடம் அல்லது பரவும் இடமாக  ஆப்கானை மாற்ற கூடாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47