லாப் காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு : லிட்ராே காஸ் நிறுவனம் புதிய சிலிண்டர் விற்பனை நிறுத்தியது - அசெளகரியத்தில் நுகர்வோர்

Published By: Digital Desk 2

13 Sep, 2021 | 02:07 PM
image

எம்.ஆர்.எம்.வசீம்

விலை அதிகரிக்கப்பட்டுள்ளபோதும் சந்தையில் லாப் காஸ் சிலிண்டருக்கான தட்டுப்பாடு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

அதனால் நுகர்வோர் பாரிய அசெளகரியங்களுக்கு ஆளாகி வருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. குறித்த காஸ் சிலிண்டர் குறைந்தளவிலேயே சந்தைக்கு விநியோகித்து வருவதால் நுகர்வோருக்கு தேவையான நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.

இதன் காரணமாக லாப் காஸ் நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். சில பிரதேசங்களில் நுகர்வோர் காஸ் சிலிண்டரை கொள்வனவு செய்துகொள்வதற்காக காலை வேளையில் நீண்ட வரிசையில் இருப்பதையும்  காணமுடிகின்றது.

அத்துடன் லிட்ராே காஸ் நிறுவனம் புதிய சிலிண்டர் விற்பனை செய்வதை நிறுத்தி இருப்பதால் மக்கள் மேலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இருந்தபோதும் லிட்ராே காஸ் சமையல் எரிவாயு தற்போது தட்டுப்பாடு இன்றி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் டொலர் பற்றாக்குறை காரணமாக காஸ் இறக்குமதி செய்வதற்கு முடியாமல் இருக்கின்றது. கைவசம் இருக்கும் காஸ் சிலிண்டர்களை தேவைக்கேற்ற வகையில் விநியோகித்து வருவதால் சந்தையில் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு காரணம் என லாப் காஸ் நிறுவனம் தெரிவிக்கின்றது.

அத்துடன் கடந்த மாதம் சமையல் எரிவாயுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்ட போது, லாப் காஸ் நிறுவனத்தின் 12.5கிலாே கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 363ரூபாவினாலும் 5கிலாே கிராம் கொண்ட காஸ் சிலிண்டரின் விலையை 143ரூபாவினால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் நடவடிக்கைகள் தொடர்பான அதிகாரசபை கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி அனுமதி வழங்கி இருந்தது.

அதன் பிரகாரம் 1493ரூபாவுக்கு இருந்த 12.5கிலாே கிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 1856 ரூபாவரையும் 600ரூபாவுக்கு இருந்த  5கிலாே கிராம் கொண்ட காஸ் சிலிண்டரின் விலை 743வரையும் அதிகரிக்கப்படுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19