மட்டுவில் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் நடமாடியவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை; ஒருவருக்கு தொற்றுறுதி

Published By: Digital Desk 3

11 Sep, 2021 | 08:40 PM
image

மட்டக்களப்பு நகர் பகுதியில் பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் மாநகரசபை இணைந்து  விசேட வீதிச்சோனை நடவடிக்கை ஒன்றை இன்று சனிக்கிழமை முன்னெடுத்தனர்.

இதன்போது ஊரடங்கு சட்டத்தை மீறி கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்ததுடன் தேவையின்றி வீதிகளில் நடமாடியவர்களை பிடித்து எச்சரித்ததுடன், முககவசம் அணியாதர்களை பிடித்து அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டனர்.

தற்போது நாடுபூராக ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் மட்டக்களப்பு தலைமையக பொலஜஸ் பிரிவிலுள்ள இருதயபுரம், ஊறணி, கூளாவடி பார்வீதி, கொக்குவில், கல்லடி போன்ற பிரதேசங்களில் மக்கள் சட்டத்தை மீறி தேவையின்றி வீதிகளில் நடமாடுவதாகவும், அவ்வாறே அந்த பகுதிகளில் உள்ள பல கடைகள் திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாகவும் தொடர்ச்சியாக சுகாதார துறையினர் பொலிசாருக்கு முறைப்பாடு கிடைத்துவருகின்றது.

இந்நிலையில் இன்று கூளாவடீ மற்றும் பார்வீதி போன்ற பகுதிகளில் இந்த விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டபோது சட்டத்தை மீறி கடைகளை திறந்து வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை எச்சரித்து கடைகளை மூடவைத்ததுடன் சில கடைகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

அதேவேளை வீதிகளில் மோட்டர்சைக்கிள் முச்சக்கரவண்டி மற்றும் வாகனங்களில் தேவையின்றி நடமாடியவர்களை பிடித்து சோதனை மேற்கோண்டு திருப்பி அனுப்பியதுடன் இருவரை பிடித்து கல்லடி கடற்கரையில் உள்ள பிரதேசத்தில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50