'' லாப் சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது "

Published By: Digital Desk 2

12 Sep, 2021 | 11:30 AM
image

இராஜதுரை ஹஷான்

லாப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க கூடாது.  நிறுவனங்களின் கோரிக்கைக்கு மாத்திரம் கவனம் செலுத்தாமல் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தரப்பில் இருந்து அரசாங்கம் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படாத காரணத்தினால் தமது நிறுவனத்திற்கு 8 பில்லியன் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் 12.5 கிலோகிராம்  சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 291 ரூபாவிலும், 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 114 ரூபாவிலும் அதிகரிக்க அனுமதி வழங்குமாறு லாப்  நிறுவனம் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

 இக்கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டால் 12.5 கிலோகிராம் நிறைவுடைய லாப் ரக சமையல் எரிவாயுவின் புதிய  விலை 2147 ரூபாவாகவும், 5 கிலோகிராம் நிறையுடைய  சமையல் எரிவாயுவின் புதிய விலை 858 ரூபாவாகவும் உயர்வடையும்.

கடந்த மாதம் 12.5 நிறையுடைய லாப் ரக சமையல் எரிவாயுவின் விலை 363 ரூபாவிலும், 5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயுவின் விலை 145 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டன.  சமையல் எரிவாயு சிலிண்டர் இறக்குமதிக்கு அதிக செலவாகுகிறது. அதனால் தாம் நஷ்டமடைவதாக  லாப் சமையல் எரிவாயு நிறுவனத்தினர் குறிப்பிடுகிறார்கள்.

லாப்ரக சமையல் எரிவாயுவின் தற்போதைய விலை அதிகரிப்பினால் மக்கள் பெரும் நெருக்கடியை எதிர்க் கொண்டுள்ளார்கள்.ஆகவே மக்களின் தரப்பில் இருந்தும் அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46