தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற சட்டத்திற்கு எதிராக போராடிய மிக்சிக்கன் மாநிலத்தின் அரசியல்வாதி ஒருவர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியாகியுள்ளார். 

மிக்சிக்கன் மாநிலத்தின் பிரதிநிதியான 66 வயதுடைய பீட்டர் பெட்டாலியா என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வட மிக்சிக்கன் பகுதியில் உள்ள அதிவேக பாதையில் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது டிரக் ஒன்று மோதியுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த பீட்டர் பெட்டாலியா சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.