இந்தியாவில் சீனாவின் கால் தடங்களின் வரைப்படம் : வெளியானது 76 பக்க அறிக்கை

Published By: Gayathri

10 Sep, 2021 | 01:58 PM
image

சட்ட மற்றும் சமூக கூட்டமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இணைய வழியூடான கலந்துரையாடலை அதன் தலைவர் என். சி . பிபீந்திரா  உரையாற்றிய பின்னர் இந்தியாவில் சீன கால் தடம் மற்றும் செல்வாக்கு  என்ற தொனிப்பொருளிலான  76 பக்க ஆவணத்தை வெளியிட்டார்.

பல்கலைக்கழகங்கள், சிந்தனை மையங்கள் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றை எவ்வாறு குறிவைத்தது நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதை இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.  

அதேபோன்று ஊடகங்கள், சமூக ஊடகங்கள், சினிமா, ஒன்லைன் கேமிங் மற்றும் தொழில் போன்றவைகளிலுள்ள சீன செல்வாக்கின் விரிவாக்கத்தை உணர முடிவதாகம் ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.



இந்தியாவில் ஏற்கனவே நிறைய சீன செல்வாக்கு இருப்பதாகக் உலக உய்குர் காங்கிரசின் சீன விவகாரத்துறை இயக்குனர் திரு. இல்ஷாத் கோக்போர் இதன் போது கூறினார்.

சீன உணர்வுகள் இந்தியாவை அவமதிக்கின்றது. சீனா இந்தியாவை 3 ஆவது உலக ஏழை நாடாக பார்க்கிறது. ஆனாலும் சீனாவுக்கு இந்தியாவில் நிறைய ஊடுருவல் மற்றும் முதலீடுகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.  

சீனர்களின் செல்வாக்கை அடிக்கோடிட்டுக் காட்ட 2019 இல் சீன திரைப்பட விழாவில் ஷாருக் கான் பேசியதற்கான உதாரணத்தை அவர் குறிப்பிட்டார்.

சீனர்கள் எவ்வாறு கிழக்கு துர்கெஸ்தானுக்கு வந்து தங்கள் நல்ல, கண்ணியமான பக்கத்தைக் காட்டினார்கள் என்று அவர் விபரித்திருந்தார்.

ஆனால் இப்போது அவர்கள் உய்குர்களை வதை முகாம்களில் அடைத்துள்ளனர். சீனா 17 அம்ச ஒப்பந்தத்தில் கையெழுத்திட திபெத்தியர்களை கட்டாயப்படுத்தியதும், அவர்கள் திபெத்தின் கலாச்சாரத்தை மதிக்கப் போவதாக ஒப்புக் கொண்டபோதும், தலாய் லாமாவை வெளியேறும்படி கட்டாயப்படுத்தியமை போன்ற நடவடிக்கைகள் தெற்கு மங்கோலியாவிலும் (இன்றைய உள் மங்கோலியா) காணப்படுவதாக அவர் கூறினார்.

ஆனால் உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் சீன அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட விரும்புகின்றன. இந்தியாவின் ஜனநாயகத்தை சீனா அழிக்க முடியும் என்று கருதுகிறார்.

காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை சீனா ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சீனா தாய்வானை பலவந்தமாக கைப்பற்ற முயற்சிக்கிறது என்றும், அது வெற்றி பெற்றவுடன், அமெரிக்கா பசிபிக் பெருங்கடலில் இருந்து வெளியேற்றப்படும் என்றும், பின்னர் சீனா தனது விருப்பப்படி இந்தியாவுடன் விதிமுறைகளை வகுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் நலன்களுக்காக எத்தனை ஊடக நிறுவனங்கள் செயல்படுகின்றன. எத்தனை சீன அறிஞர்கள் சீனப் பணத்தைப் பெற்று செயற்படுகின்றனர், பாராட்டுகிறார்கள் என்பதை வெளிப்படையாகின்றது.

இந்தியாவுடன் ஒப்பிடுகையில், ஆப்பிரிக்காவின் நிலைமையை  கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஆப்பிரிக்காவில் 7 அரசு கட்டிடங்கள் சீனர்களால் கட்டப்பட்டவை.

இதனால் அங்கு ஏற்பட்டுள்ள நிலைமைகளை உலகம் அறியும். சீனாவின் மிகப்பெரிய மக்கள் தொகையே தனது  மிகப்பெரிய ஆயுதமாக அந்நாடு கருதுகின்றது.

எனவே அனைத்து ஜனநாயக நாடுகளும் முன் வந்து சீனாவை எதிர்கொள்ள ஒன்றிணைய வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

தி நியூ இந்தியன் நிறுவனர் ஆர்த்தி டிக்கூ, சீனாவின் செல்வாக்கு இன்று உலகம் முழுவதும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை விட அதிகமாக உள்ளது என்று குறிப்பிட்டார்.

சீனாவின் மென்மையான சக்தி  பிரயோகம் கவனிக்கப்படுவதில்லை என்றும், சீனாவின் மென்மையான சக்தி அமெரிக்காவின் பின்னால் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

திபெத்தில் சீனக் கொடுமைகள் பற்றிய இலக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்றும் குறிப்பிட்டார்.

சீனர்களை மகிழ்விக்க பொலிவுட் எதையும் செய்யாது என்றும் இந்திய ஊடகங்களில் யாரும் சின்ஜியாங் அல்லது உய்குர் பற்றி பேசுவதில்லை. 


சீன செல்வாக்கின் மிகப்பெரிய நிகழ்ச்சியானது இந்திய வீரர்கள் கால்வானில் வீரமரணம் அடைந்தபோது எந்த கோபத்தையும் நாங்கள் காணவில்லை. முழு உலகமும் சீனாவால் மிரட்டப்பட்டாலும், சீனா அமெரிக்காவால் மிரட்டப்படவில்லை. 


இறுதியாக சீனா தன்னைச் சுற்றி வலுவான சுவர்களைக் கட்டியுள்ளது. இந்தியா போன்ற ஜனநாயகங்கள் சீனாவில் ஊடுருவிச் செல்ல வழி இல்லை என்றும் ஆனால் சீனா மற்ற ஜனநாயக நாடுகளில் தவறான கோடுகளைப் பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
 
தெற்கு மங்கோலிய மனித உரிமை தகவல் மையத்தின் இயக்குனர் எங்கெபாத்து டோஹோகாக் குறிப்பிடுகையில், 
சீனாவின் தெற்கு மங்கோலியாவின் மீதான படையெடுப்பு  புதிய காலனித்துவம் - நவீன ஏகாதிபத்தியத்தின் தொடக்கம் என தெரிவித்தார். 


தெற்கு மங்கோலியாவில் சீனாவின் புதிய காலனித்துவத்தின் 4 சுட்டிகள் உள்ளது. முதலாவது - பொருளாதார வளர்ச்சி - தெற்கு மங்கோலியாவில் வளர்ச்சி, நகரமயமாக்கல் மற்றும் உதவி என்ற பெயரில் சீனா இயற்கை சூழலை சீரழித்ததுடன் உள்ளூர் பொருளாதாரம் மோசமாக வீழ்ச்சிக்கண்டது. 


இரண்டாவது - மக்கள்தொகை பரிமாற்றம்- இணைப்பதற்கு முன், உள் மங்கோலியாவில் மக்கள் தொகை விகிதம் 5 மங்கோலியர்களுக்கு ஒரு சீனர் காணப்பட்ட நிலையில் தற்போது 5 சீனர்களுக்கு ஒரு மங்கோலியன்  என்ற விகிதாசாரமே காணப்படுகின்றது.  வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கல் என்ற பெயரில் ஏராளமான சீனர்கள் தெற்கு மங்கோலியாவுக்குச் சென்றனர்.

மூன்றாவது -  இழிநிலை - கிராமப்புற மங்கோலியப் பள்ளிகள் அகற்றப்பட்டு சீனப் பள்ளிகள் அமைக்கப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கி, மங்கோலிய கலாச்சாரத்தை அழிக்கும் பொருட்டு சீன அரசாங்கம் மங்கோலிய மொழியை சீனர்களுக்கு பயிற்றுவிக்கும் மொழியாக மாற்றியது.

நான்காவது - தெற்கு மங்கோலியா சீனாவின் ஆற்றல் தளமாக மாறியது . இடம்பெயர்ந்த பல மேய்ப்பர்கள் வேலையில்லாமல், வீடற்ற மற்றும் நிலமற்றவர்களாக மாறினர். ஆறுகள், ஏரிகள் வறண்டு, மங்கோலிய புல்வெளிகள் அழிக்கப்பட்டன. இந்த நான்கு விடயங்களுமே மங்கோலியாவின் திட்டங்களாகும் என குறிப்பிட்டார்.


பொதுக் கருத்தை உருவாக்கும் துறைகளில் சீன செல்வாக்கு எவ்வளவு தூரம் ஊடுருவியிருக்கிறது என்பதை இந்த அறிக்கை பதிவு செய்கிறது என ஜெனீவாவின் திபெத் பணியகத்தின் அதிகாரி கால்டன் ஸோமோ குறிப்பிட்டார்.

இந்தியா திபெத்துடனான எல்லையைப் பகிர்ந்துகொள்கிறது. சீனாவை அல்ல. இன்னும் இந்திய ஊடகங்களில் இந்தியா - திபெத் எல்லைக்கு பதிலாக  சீன - இந்திய  எல்லை என்ற விடயம்  பயன்படுத்தப்படுகிறது. 


சுதந்திர திபெத் மற்றும் சீனாவின் அட்டூழியங்கள் மற்றும் திபெத்தின் ஆக்கிரமிப்பை சித்தரிக்கும் இலக்கியங்கள் இனி கிடைக்காது அவை அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன.

இந்தியா இருக்க வேண்டிய இடத்தில் உறுதியாக இருக்க வேண்டும், அது இருக்கக்கூடிய இடத்தில் போட்டித்தன்மையுடன் இருக்க வேண்டும். 


வளர்ந்த நாடுகள் சீன நச்சு இராஜதந்திரத்தை  கவனிக்கவில்லை. அதனால் தான் நாம் அனைவரும் இன்று இந்த நிலையில் இருக்கின்றோம். 


திபெத்தில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கோடை விடுமுறையில் கட்டாய இராணுவ கோடைக்கால முகாமில் கலந்துகொள்ள வேண்டும்.  


சீன அதிகாரிகளுக்கு எதிராக பல திபெத்தியர்கள் தீக்குளிப்பை மேற்கொண்டதாக சுட்டிக்காட்டிய அவர், பெய்ஜிங்கின் நிகழ்ச்சி நிரலை எதிர்கொள்வதற்கு ஒரு செறிவான முயற்சி தேவை என்றும் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52