மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தடுப்பூசிகள் அம்பாந்தோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது -  சம்பிக ரணவக்க

Published By: Digital Desk 3

10 Sep, 2021 | 10:12 AM
image

(இராஜதுரை ஹஷான்)

இளம் அமைச்சரின் தேவைக்காகவா அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு பைஸர் கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. பாடசாலை மாணவர்களுக்கு  பொருத்தமானது என அங்கிகரிக்கப்பட்டுள்ள பைஸர் தடுப்பூசியை மாணவர்களுக்கு வழங்கி எதிர்வரும் ஜனவரி மாதம் பாடசாலைகளை திறப்பதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் பொறுப்புடன் முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட்-19 தடுப்பூசி விடயத்தை அரசாங்கம் தனது அரசியல் தேவைக்காக பயன்படுத்திக் கொள்வதை முதலில் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கொவிட் விடயத்தில் அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டதன் விளைவை இன்று  நாட்டு மக்கள் எதிர்க் கொள்கிறார்கள்.

கொவிட் தடுப்பூசி இன்று அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளன. அரசியல்வாதிகளின் தேவைக்காக கொவிட்-19 தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன. சுகாதார தரப்பினரது ஆலோசனைக்கு அமைய தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள்முன்னெடுக்கப்படவில்லை.

இளம் அமைச்சரின் தேவைக்காகவா பைஸர் தடுப்பூசிகள் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. கொவிட் தடுப்பூசி வழங்கலில் ஆரம்பத்தில் இருந்து முறைக்கேடுகள் இடம் பெற்றுள்ளன.

பைஸர் தடுப்பூசி பாடசாலை மாணவர்களுக்கு வழங்கலாம் என  அங்கிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே பாடசாலை மாணவர்களுக்கு துரிதமாக பைஸர் தடுப்பூசிகளை வழங்கி எதிர்வரும் ஜனவரி மாதம் பாடசாலைகளை திறப்பதற்கான நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

ஆசிரியர்கள் தங்களின் உரிமைகளுக்காகவே போராடுகிறார்கள். இவர்களின் கோரிக்கைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. மாறாக ஆசிரியர்களை படுமோசமானவர்கள்என்றும், கொவிட் வைரஸ் பரவலை தீவிரப்படுத்தியவர்கள் என்றும் ஆளும் தரப்பினர்விமர்சிக்கின்றார்கள்.இவை முற்றிலும் வெறுக்கத்தக்க செயற்பாடு.

ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்துக் கொண்டதனால் தான் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளாக்கி மரணித்துள்ளார்கள் என அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளமை எதிர்கால தலைமுறையினரது கல்விக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே ஆசிரியர்கள் விவகாரத்தில் அரசாங்கத்தில் கௌரவமாக நடந்துக் கொள்ள வேண்டும்என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51