மலையக காணிகளில் மாணிக்கக்கல் அகழ்வதற்கு பால் பண்ணை என்ற போர்வையில் காணிகள் சூறை- மனோ

Published By: Digital Desk 2

10 Sep, 2021 | 11:42 AM
image

எம்.எம்.சில்வெஸ்டர்

மலையக மக்கள் செரிந்து வாழும் பெருந்தோட்டக் காணிகளில் தனியார் நிறுவனங்களின் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்படவுள்ள  பாரிய பால் பண்ணைகள் நிருவுவதற்கு பின்னனி உள்ளது. 

இந்தப் பகுதிகளில் மாணிக்கக்கற்கள் அகழ்வாராயும் மறைமுக வேலைத்திட்டமொன்று உள்ளது. இது மலையக மக்களுக்கான பிரச்சினை மாத்திரம் அல்ல. இது தேசிய பிரச்சினையாகும் என தமிழர் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனின்  தெஹிவளையில் உள்ள இல்லத்தில் நேற்று காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவறு தெரிவித்தார்.  

அவர் மேலும் கூறுகையில்,

"விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மலையக பெருந்தோட்ட காணிகளில் தனியார் நிறுவனங்களின் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்படவுள்ள பால் பண்ணைகள் நிருவுவதற்கான அமைச்சரவைப் அனுமதிப் பத்திரத்தை கடந்த திங்கட்கிழமை பெற்றுக்கொண்டார். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

இந்த செயற்பாடுகள் மலையக மக்களுக்கு அநீதி, அசாதாரண நிலை ஏற்படுத்தாது இருக்குமாகவிருந்தால் நாம் எமது இரண்டு கரங்களையும் உயர்த்தி ஆதரவு வழங்குவோம். ஆயினும், இவர்களால் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த பால் பண்ணை வேலைத்திட்டத்தில் ஏதோ அசாதாரண நிலை ஏற்படுவதாக எம்மால் அவதானிக்க முடிகின்றது.  

அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி மாவட்டத்தின் நாவலப்பிட்டி கலபொட தோட்டம் , அன்த்தான தெல்தோட்டை தோட்டம், கிரேட் வெலி தோட்டம் மற்றும் நுவரெலியாவிலுள்ள  வட்டவல மவுண்ட்ஜின் தோட்டம்  ஆகிய பகுதிகளில்  வசிக்கும் தொழிலாளர் சமூகத்தினருடன் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடாது, அம்மக்களை கவனத்திற்கொள்ளாது இந்த தீர்மானத்தை அமைச்சர் மஹிந்தானந்த எடுத்துள்ளார்.  

இந்த மக்கள்தான் தொழிலாளர்களாக இருந்துகொண்டு இந்ததோட்டங்களை அமைத்தனர். இவர்கள் இன்று நேற்று அல்ல 150 ஆண்டு காலத்துக்கும் மேலாக பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வருகின்றனர். தற்போது இந்த மக்கள் அனைவருமே இலங்கை பிரஜைகளாவர். இந்த மக்களுக்கு சாதாரண தீர்வு கிடைக்க வேண்டும் என்ப‍தே எம் ஒவ்வொருவரினதும் எதிர்பார்ப்பாகும்.

இந்த தோட்ட தொழிலாளர்கள் தான் எமது நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளனர். கொ‍ரோனா அச்சுறுத்தலால், நாட்டுக்கு இறக்குமதி வருமானம் இல்லை. சுற்றுலாத்துறை வருமானம்  வீழ்ச்சியடைந்துள்ளது. 

வெளிநாடுகளில் தொழில்புரிபவர்களிடமிருந்து எமக்கு போதுமான வருமானம் கிடைப்பதில்லை. இதனால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. எனினும், நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவது தேயிலை ஆகும். 

இந்த தோட்டப்புற தொழிலாளர் வர்க்கம் தேயிலை, இறப்பர் போன்ற பெருந்தோட்டங்களில் காலம்காலமாக தொழில் புரிபவர்கள். இந்த ஆட்பலம் இலங்கை பொருளாதாரத்துக்கு அன்று போலவே இன்றும் கைகொடுத்து வருகிறது. அவர்களை இனிமேலும் அடிமைகள் போல் நடத்த இடமளிக்க முடியாது.

இந்த பால் பண்ணைகளை நிறுவுவதன் மூலமாக 500 தொழில்வாய்ப்புகள் கொடுக்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.  பால் பண்ணையை நடத்துவதற்குரிய போதிய அறிவும் அனுபவமும் அவர்களிடம் உள்ளது.

ஆகவே, பெருந்தோட்ட காணிகளில் பால் பண்ணை அமைப்பதை தனியாருக்கு வழங்குவதை தவிர்த்து,  இந்தக் காணிகளை மக்களுக்கு குத்தகை அடப்படையில் பிரித்து வழங்கி அவர்களையும் பங்காளர்களாக மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வாறு செய்தால் நாடு பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதுடன், தோட்ட மக்களுக்கும் முன்னேறுவர்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில்  நீர்த்தேக்கங்கள் உள்ளன. அங்கு பால் பண்ணைகளை அமைப்பதன் மூலம் நீர்த்தேக்கங்கள் இல்லாமல் போகும். இதனால், குடிநீர் மற்றும் மின்சார உற்பத்தி குறைவடையும். ‍மேலும், சுற்றுபுறச் சூழல் மாசடையும். ஆகவே, இது தொடர்பில் சுற்றுப்புறச் சூழல் ஆதரவாளர்களும் தங்களது அவதானத்தை செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறோம்.

மலையக மக்கள் செரிந்து வாழும் பெருந்தோட்டக் காணிகளில் தனியார் நிறுவனங்களின் முதலீட்டுடன் ஆரம்பிக்கப்படவுள்ள பால் பண்ணைகள் நிருவுவதற்கு பின்னனி உள்ளது. இந்தப் பகுதிகளில் மாணிக்கக்கற்கள் அகழ்வாராயும் மறைமுக வேலைத்திட்டமொன்று உள்ளது. இது மலையக மக்களுக்கான பிரச்சினை மாத்திரம் அல்ல. இது தேசிய பிரச்சினையாகும்"  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04