மலையக மக்களின் வாழ்விடங்களை இல்லாமல் செய்து அவர்ளை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டாம் - வேலுகுமார்

Published By: Digital Desk 4

09 Sep, 2021 | 04:09 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர் )

தேசிய பண்ணை விலங்கு அதிகார சபையின் ( NLDB)  கீழுள்ள சகல பண்ணைகளும் முழுமையான பயன்பாட்டுடன் செயற்படுமாயின் பால் உற்பத்தியில் நாடு தன்னிறைவை அடையும் என  தமிழர் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான  எம்.வேலுகுமார் தெரிவித்தார்.

Articles Tagged Under: வேலுகுமார் | Virakesari.lk

தமிழர் முற்போக்கு கூட்டணித் தலைவர் மனோ கணேசன் தலைமையில் இன்று  அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் கூறுகையில்,

"இந்நாட்டின் தேயிலை உற்பத்தில் மலையக மக்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். 150 ஆண்டுகளுக்கும் மேலாக இந்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பாடுபட்ட மக்கள் , தங்களின் வாழ்க்கையை வசதியாக மாற்றுவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். 

அவர்களின் வாழ்வாதாரத்தை நல்ல நிலைக்கு கொண்டு செல்வதற்கு அவர்களுக்கு பால் பண்ணை அமைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுங்கள். 

அதற்குத் தேவையான ஆடு, மாடு, பசு ஆகிய கால்நடைகளை வழங்கி நாட்டின் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்குத் தேவையான செயற்திட்டங்களை முன்னெடுக்கும்படி அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், தேசிய பண்ணை விலங்கு அதிகார சபையின் ( NLDB)  கீழுள்ள 31 பண்ணைகளும் முழுமையான பயன்பாட்டுடன் செயற்படுமாயின் பால் உற்பத்தியில் நாடு தன்னிறைவை அடையும்.  

அதைவிடுத்து, மலையக பெருந்தோட்ட காணிகளில் பால் பண்ணை நிறுவனங்களை நிறுவுவதற்காக அமைச்சர் மஹிந்தானந்த  அமைச்சரவை அனுமதியைப் ‍பெற்றுள்ளமை மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் விடயமாகும்.  

மக்களின் வாழ்விடங்களை இல்லாமல் செய்து அவர்ளை அந்த இடங்களிலிருந்து அப்புறப்படுத்த வேண்டாம். 

மேலும், இதே நிலைமை மலையக பெருந்தோட்ட மக்கள் வாழக்கூடிய கேகாலை மற்றும் இரத்தினபுரிய ஆகிய மாவட்டங்களிலும் எதிர்காலத்தில் நடைபெறும்.

ஆகவே,  மலையக மக்களின் வாக்குகள் மூலம் அமைச்சுப் பதவிகளையும் , இராஜாங்க அமைச்சுப் பதவிகளையும் பெற்று அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நீங்கள் மக்களுக்காக சிந்தித்து செயற்படுங்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22