290 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் விவகாரம்: பொப் மார்லி கைது

Published By: Vishnu

09 Sep, 2021 | 02:19 PM
image

290 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கடத்தல் விவகாரத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான பொப் மார்லி எல்பிட்டிய பகுதியில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தேசிய உளவுச் சேவையின் தகவலுக்கு அமைய, பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவும் கடற்படையினரும் இணைந்து பேருவளைக்கு அப்பால் உள்ள ஆழ் கடலில் கடந்த மாத இறுதியில் முன்னெடுத்த விஷேட நடவடிக்கையின் போது படகொன்றிலிருந்து 288 கிலோ 644 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இவற்றின் பெறுமதி 290 கோடி ரூபாவுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டதுடன், கடத்தலில் ஈடுபட்ட ஐவரும் கைதுசெய்யப்பட்டனர்.

கைதான சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இந்த போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டார்.

அதன்படி தலாஹேன - மாலபே மற்றும் உடுமுல்ல - பத்தரமுல்லை ஆகிய முகவரிகளை கொண்ட 41 வயதான ' பொப் மார்லி ' என அறியப்படும் களுத்துறை சமிந்த தாப்றூ  என்பவரே இந்த விவகாரத்தில் உள்ள உள்நாட்டு  பிரதான சந்தேக நபர் என பொலிஸ் தலைமையகம் கண்டறிந்தது.

குறித்த சந்தேக நபர் தலைமறைவாக உள்ள நிலையில் அவரைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்ததுடன், பொது மக்களினது உதவியையும் நாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11