மேலும் 7 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவிப்பு விரைவில்

Published By: Vishnu

09 Sep, 2021 | 11:16 AM
image

மேலும் 7 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் பரிந்துரை கிடைத்தவுடன் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த வாரம் கூடிய அமைச்சரவை, ஒரு தடவை மட்டும் பயன்படுத்தி அப்புறப்படுத்தும் மேலும் ஏழு  பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை, விநியோகத்திற்கு தடை விதிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

இந் நிலையில் இது தொடர்பில் நேற்று சுற்றுச்சூழல் அமைச்சில் நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்ட கருத்தினை கூறினார்.

பிளாஸ்டிக் ஸ்ரோ, முள்ளுக்கரண்டி, கரண்டி, பானக் கோப்பை, கத்தி, இடியப்பத் தட்டு மற்றும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீனால் செய்யப்பட்ட பூ மாலைகள் ஆகியவற்றுக்கே தடை விதிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியாகவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41