ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தகவல்கள் காணாமல்போன விவகாரம் : தரவை கட்டமைத்த தனியார் நிறுவன அதிகாரி கைது

Published By: Digital Desk 4

09 Sep, 2021 | 12:02 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் ஈ.என்.ஆர்.எம்.ஏ. (ENMRA) தரவுக்கட்டமைப்புக்குள், பலவந்தமாக உள் நுழைந்து,  தகவல்களை அழித்தமை தொடர்பில்  எபிக் லங்கா டெக்னொலஜி தனியார் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி  தரின் கல்பகே சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 இந்த விவகாரம் தொடர்பில் சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்த விஷேட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைய இன்று இரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ENMRA தரவுக்கட்டமைப்பை ஸ்தாபிக்கும் ஆலோசனை சேவை மற்றும் அதனுடன் தொடர்புடைய பொறுப்புகள் குறித்து,  எபிக் லங்க டெக்னொலஜி நிறுவனம், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியன 2018 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி முதல்  ஐந்து வருட கால உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

 இந் நிலையிலேயே,  விசாரணைகளுக்காக எபிக் லங்கா டெக்னொலஜி நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகாரி இன்று  அழைக்கப்பட்டு விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நாளை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக சி.ஐ.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

குறித்த தரவுக் கட்டமைப்பு தொடர்பில் திட்ட பணிப்பாளராக செயற்பட்டுள்ள இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பலரும் இதன் போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன.

தரவுக்கட்டமைப்பில் இருந்த சுமார் 11 இலட்சம் தரவுகள்  காணாமல் போனமை தொடர்பில் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் திகதி தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் தலைவர் ரசித விஜேவன்ன சி.ஐ.டியி. முறையிட்டிருந்தார்.

அது குறித்து  குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையிலேயே தற்போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41