மன்னாரிலிருந்து கொரோனா சடலங்களை தகனம் செய்ய கொண்டு செல்வதில் சிக்கல் 

Published By: Digital Desk 4

08 Sep, 2021 | 05:17 PM
image

மன்னார் மாவட்டத்தில் கொரோனா  தொற்று காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை வவுனியாவிற்கு கொண்டு சென்று தகனம் செய்வதில் பல்வேறு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

அண்மைக் காலமாக மன்னார் மாவட்டத்தில் கொரோனா  தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்கள் வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் தற்போது வவுனியாவிற்கு சடலங்களைக் கொண்டு சென்று தகனம் செய்வதில் தடங்கல்கள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியாவில் உள்ள மின் தகன நிலையத்தில் அடிக்கடி ஏற்பட்டு வந்த கோளாறுகள் காரணமாகவும் அங்கே அதிகமான சடலங்கள் சேர்ந்து இருக்கின்ற காரணத்தினாலும் சடலங்களை அங்கு மின் தகனம் செய்வதில் தடங்கள் ஏற்பட்டு வந்திருக்கின்றது.

மன்னார் மாவட்டத்தில் நேற்று இரவு மற்றும் இன்று அதிகாலை இரண்டு பெண்கள் கொரோனா தொற்று   காரணமாக உயிரிழந்த நிலையில் அவர்களின் சடலங்கள் இன்றைய தினம் வவுனியாவில் உள்ள மின் தகன நிலையத்திற்கு கொண்டு சென்று தகனம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

 எனினும் வவுனியாவில் அமைந்துள்ள மின் தகன நிலையத்தில் ஏற்கனவே 12 சடலங்கள் தகனம் செய்வதாக வைக்கப்பட்டிருப்பதாகவும், மன்னாரில் இருந்து கொண்டு வரும் சடலகளை தகனம் செய்வது சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மன்னார் மாவட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மற்றும் இன்று புதன் கிழமை உயிரிழந்த இருவரது சடலங்கள் தகனம் செய்ய முடியாத நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிய வருகின்றது.

இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் அவர்களை தொடர்புகொண்டு வினவிய போது..

மன்னார் மாவட்டத்தில் இறுதியாக நேற்றும் இன்றும் உயிரிழந்த இரண்டு பெண்களுடைய சடலங்களை வவுனியாவில் உள்ள மின் தகன நிலையத்திற்கு கொண்டு சென்று தகனம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 எனினும் அங்கு ஏற்கனவே 12 சடலங்கள் தகனம் செய்வதற்காக வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

 இந்த நிலையில் குறித்த இரண்டு சடலங்களும் வவுனியாவிற்கு  கொண்டு சென்று தகனம் செய்ய முடியாத நிலையில் தற்போது மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் பிரேத  அறையில் வைக்கப்பட்டுள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53