இந்தியாவின் தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் 90 பேர் இன்று (13) இலங்கை வந்தடைந்துள்ளனர்.

இதில் 45 பெண்கள் உட்பட 90 பேர் இலங்கை வந்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாறு இலங்கை வந்துள்ளவர்கள்யாழ்பாணம், அம்பாறை , மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 90 பேரையும் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத விவகாரங்களுக்கான அமைச்சு தெரிவித்துள்ளது.