சம்மாந்துறையில் பற்றி எரியும் நாணல் காடு

Published By: Gayathri

08 Sep, 2021 | 03:14 PM
image

சம்மாந்துறை, சவளக்கடை பொலிஸ் எல்லை பகுதிகளில் உள்ள  நாணல் காடுகள் கடந்த 3 தினங்களாக  எரிந்துகொண்டு இருக்கிறன.

இதனால் குறித்த பகுதியைச் சூழவுள்ள சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை, மருதமுனை, பெரிய நீலாவணை பகுதிகளில் எரிந்த நாணல் கீற்றின் சாம்பல் துகள்கள் விழுந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

ஆற்றுப்படுகையில் கடந்த காலங்களில் ஏற்பட்டதைப்போன்று  தீவிபத்து மீண்டும்  ஏற்பட்டதில்  நாணல், மூங்கில் சருகுகள் எரிந்து நாசமாகி வருகின்றன.

மேலும் அருகே எவ்வித குடியிருப்புகளும் இல்லாததால் எவ்வித உயிர் சேதமோ பொருட்சேதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் அதிகமான பறவைக்குஞ்சுகள் இறந்துள்ளதுடன் பல பறவைகள் இதனால் இடம்பெயர்ந்துள்ளன.

கடந்த 3 தினங்களாக  இப்பகுதியில் வீசுகின்ற கடும் காற்றினால் குறித்த நாணல் காடுகள் உராய்விற்குட்பட்டு எரிந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அத்துடன் சில  இனந்தெரியாதவர்களினால் பறவை மிருக வேட்டைக்காவும் குறித்த நாணல் காடுகள் எரிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு எரிக்கப்பட்டு வருகின்ற நாணல்களில் குடியிருந்த  பறவைகள் சரணாலயங்கள் மிக விரைவாக அழிந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தற்போது  இப்பகுதியில் வறட்சி காரணமாக கிட்டங்கி  ஆறு வறண்டு காணப்படுகிறதுடன்  ஆற்றின் மருங்கில் உள்ள   மூங்கில் சருகு  நாணல்கள் காய்ந்து காணப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11