ஜெனிவா தீர்மானத்தை கருத்திலெடுத்து உஷாராகும் இலங்கை !

Published By: Digital Desk 4

07 Sep, 2021 | 10:04 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஜெனிவாவின் 46/1  தீர்மானமானது இலங்கையை தனிமைப்படுத்தும் என்பதோடு பொருளாதார அபிவிருத்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றில் எதிர்மாறான விளைவுகளை இந்த சவாலான கொவிட்-19 தொற்று நிலைமைகாலத்தில் ஏற்படுத்தும்.

ஆனாலும் உள்ளக பொறிமுறைகள் சோர்வின்றி முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வெளியக தகவல் சேகரிப்பு பொறிமுறைகளை  முற்றிலும்  நிராகரிப்பதாக இலங்கை குறிப்பிட்டுள்ளது.  

பின்தங்கிய வணக்கத்தலங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானம் |  Virakesari.lk

இத்தகைய சர்வதேச  கவனம் இலங்கை மீது தேவை என்பதை இலங்கை நம்பவில்லை. சர்வதேச   சமூகத்திற்கும் குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் வழங்கிய உறுதி மொழிகளை தொடர்ந்தும் மதிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் குற்றச்சாட்டுக்களை நிராகரித்து மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலின் முன்னேற்றங்களை தெளிவுப்படுத்தி 13 பக்கதிலான அறிக்கையினை  கொழும்பில் உள்ள அனைத்து இராஜதந்திர மையங்களுக்கும் அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது.

இந்த அறிக்கையிலேயே  மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளதுடன் , அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய நாடுகள் மனித  உரிமைகள்  பேரவையின் 2021  மார்ச்  மாதம்  ஏற்றுக்  கொள்ளப்பட்ட 46/1  தீர்மானம் குறித்து இலங்கையின் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகின்றோம்.

சம்பந்தப்பட்ட நாடென்ற வகையில் இலங்கையின்  சம்மதமின்றி  மனித  உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு  மேலதிக  ஒரு வாக்கினால் நிறைவேற்றப்பட்ட ஒன்றாகும்.

குறித்த தீர்மானமானது, ஐக்கிய நாடுகள் தாபனம் மற்றும் மனித உரிமைகள் பேரவை இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாடு மற்றும் சமாதானம், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி, இலங்கையின் உள்நாடடு சட்ட கட்டமைப்பிற்குள்  பொறுப்புடைமையை கடடியெழுப்பல்  உள்ளிட்ட பிரச்சினைகளை  தீர்ப்பதில் இலங்கையின்  உறுதியானதும்  தொடர்ச்சியானதுமான  முன்னேற்றம்  காணப்பட்ட  போதிலும் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த தீர்மானமானது இலங்கை சமுதாயத்தை தனிமைப்படுத்தும் என்பதோடு பொருளாதார அபிவிருத்தி, சமாதானம் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றில் எதிர்மாறான விளைவுகளை இந்த சவாலான கொவிட்-19 தொற்று நிலைமைகாலத்தில் ஏற்படுத்தும் என இலங்கை கருதுகின்றது.

உள்ளகபொறிமுறைகள் சோர்வின்றி முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் வெளியக தகவல் சேகரிப்பு பொறிமுறைகளை  இலங்கை  முற்றிலும்  நிராகரிக்கின்றது.  

சம்பந்தப்பட்ட  நாடென்ற  வகையில் இலங்கையின் அனுமதி மற்றும் ஒத்துழைப்பின்றி வெளியக பொறுப்புக் கூறல் பொறிமுறைகள் மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகள் அரசியல்மயமாக்களோடு தொடர்புப்பட்டது என்பதால் அதன் நோக்கமான  மனித உரிமைகள் சார் குறிக்கோள்களை அடைய முடியாது போகும் என்பதை  சர்வதேச  சமூகம்  நன்கு  அறியும்.  

அத்தோடு,  கொவிட் -19  தொற்று  உள்ளிட்ட மனிதாபிமான செயற்பாடுகளுக்கு நிதி மிக அவசியமாக தேவைப்படும் நிலையில், நிதியானது அரசியல் மயமாக்கப்பட்ட  ஜெனிவா  முன்னெடுப்புக்களுக்கு  அளிக்கப்படுவதை  நியாயப்படுத்த முடியாது. உலக நாடுகள் பலவற்றில் காணப்படுகின்ற நிலைமைகளோடு ஒப்பிடடு பார்க்கின்ற போது இத்தகைய சர்வதேச  கவனம்    இலங்கை மீது தேவை என்பதை இலங்கை நம்பவில்லை.

சர்வதேச   சமூகத்திற்கும் குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் வழங்கிய உறுதி மொழிகளை இலங்கை தொடர்ந்தும் மதிக்கின்றது   என்பதோடு நீடித்த சமாதானத்தை எய்துவதற்கு  நிறுவப்பட்டுள்ள  சுயாதீன  அமைப்புக்களுக்கு  அதிகாரத்தையும்  வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08