ஆப்கானிஸ்தானில் மாணவர்களுக்கிடையே திரை அமைத்து வகுப்புகள்

Published By: Digital Desk 3

07 Sep, 2021 | 08:58 AM
image

ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கு வகுப்பறையில் நடுவில்  திரை அமைத்து  வகுப்புகள் நடப்பதுபோன்ற புகைப்படங்கள்  வெளியாகியுள்ளன.

உள்நாட்டுப் போருக்குப் பின் ஆப்கானிஸ்தான் மெல்ல மெல்ல இயல்புநிலைக்கு திரும்புவதைத் தொடர்ந்து, அங்கு பல்கலைக்கழகங்கள் கடும் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக தலிபானின் கல்வி ஆணையம், கல்வி நிலையங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

 அதில், மாணவிகளுக்கு பெண் ஆசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்த வேண்டும் அல்லது நல்ல குணமுள்ள முதிய வயது ஆண் ஆசிரியர்களைக் கொண்டே வகுப்புகள் எடுக்க வேண்டும். ஆண்-பெண் மாணவர்களுக்கு தனித்தனியாக நுழைவுவாயில் மற்றும் வெளியேறும் பகுதிகளை அமைக்க வேண்டும்.

வகுப்புகள் முடிவடையும்போது மாணவர்கள் வெளியேறிய ஐந்து நிமிடங்களுக்குப் பிறகே மாணவிகளை வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும். மாணவிகள் நிகாப், புர்கா உடைகள் கட்டாயம் அணிய வேண்டும். ஆண்-பெண் மாணவர்களுக்கு தனித்தனியாக வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஆண்-பெண் மாணவர்களுக்கு நடுவில் திரை அமைத்து வகுப்புகள் நடப்பதுபோன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

படங்கள்; டுவிட்டர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47