வற் வரியை அதிகரிக்காது சிகரட்டிற்கு 20 ரூபா வரியை அதிகரியுங்கள். இதனூடாக வருடத்திற்கு 82 பில்லியனை மேலதிக வருமானாக பெற்றுக் கொள்ள முடியும். பொது மக்களை சுரண்ட வேண்டியதில்லை என  பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷவின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற கூட்டு எதிர் கட்சியின் செய்தியாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.