பேரச்சத்தில் ஆப்கானிய பெண் ஒப்பனை கலைஞர்கள்

Published By: Digital Desk 2

06 Sep, 2021 | 07:27 PM
image

ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் தலிபான்கள் நுழைந்து அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் பெண் மாதிரிகள் கொண்ட போஸ்டர்கள் சிதைக்கப்பட்டதாக ஆப்கானிய பெண் ஒப்பனை கலைஞருடன் முன்னெடுக்கப்பட்ட பிபிசியின் செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலிபான் படையெடுப்பு ஆப்கானிஸ்தான் பெண்களின் நம்பிக்கையை சிதைத்துவிட்டுள்ளது. அவர்கள் பெரும்பாலும் தலிபான்கள் இல்லாத ஆப்கானிஸ்தானில் வளர்ந்தனர்.

ஆப்கான் பெண்கள் கற்றுக்கொள்ளவும் முன்னேறவும் கடினமாக உழைத்தனர். பாலின சமத்துவத்தை கொண்டு வந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு நவீன பெண்ணின் வாழ்க்கையை வாழ்ந்தனர்.

காபூலுக்குள் தலிபான்களின் நுழைவு ஒப்பனை கலைஞர்கள் மற்றும் வரவேற்புரை உரிமையாளர்கள் போன்ற அழகுத் தொழிலில் பணிபுரியும் பெண்களுக்கு பெரும் நெருக்கடியையும் அச்சத்தையும் கொடுத்துள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது.

அப்படைவாத இஸ்லாமியக் குழு நகரத்திற்குள் நுழைந்தமை குறித்து  26 வயதான ஒப்பனை கலைஞர் பிபிசியிடம்  கருத்து கூறினார். அதாவது அழகுத் துறையில் பெண்கள், குறிப்பாக என்னைப் போன்றவர்கள் வெளிப்படையாக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முழு அளவில் எமது தொழிலை முடக்கிக்கொள்ளும்நிலை ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.  

மேலும் இந் நிலையானது ஆப்கானிஸ்தானில் அழகுத் துறையின் முடிவு எனவும் குறிப்பிட்டுள்ளார்.  அழகு வணிகத்தில் உள்ள பெண்கள், வெளியேற முடியாது எதிர்காலத்தைப் பற்றி பேச முடியாத நிலையிலேயே உள்ளனர்.

இப்போதே, குறித்த பெண் கற்பனை செய்த எதிர்காலத்தின் நிறம் அடர்த்தியான கருப்பு வண்ணப்பூச்சுடன் வரையப்பட்டிருப்பதாகவும் வரம்பற்ற அதிர்ச்சியின் நடுவில்உள்ளதாகவும் பிபிசி செய்தி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

தன்னை ஒரு நவீன ஆப்கானிய பெண்ணாகக் கருதுகிறார். அவர் சமூக ஊடகங்கள், திரைப்படங்களை நேசிக்கிறார். வாகனம் ஓட்டத் தெரிந்தவர் மற்றும் தொழில் இலட்சியங்களைக் கொண்டிருந்தார். இவ்வாறானதொரு நிலையில் என்றோ ஒருநாள் தலிபான்கள் தன்னை நெருங்குவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

90 களில் பிறந்த அவருக்கு முந்தைய தாலிபான் ஆட்சியின் நினைவுகள் இல்லை. அவர்கள் முதலில் தங்கள் நாட்டில் அழகு நிலையங்களை தடை செய்தனர்.உலகின் பெரும்பாலான பகுதிகளில் இருப்பதால் ஆப்கானிஸ்தானில் பெண்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக அழகு நிலையங்கள் இருந்தன.

2001-ல் தலிபான்களை வீழ்த்திய அமெரிக்க தலைமையிலான படையெடுப்பிலிருந்து இரண்டு தசாப்தங்களில், காபூலில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட அழகு நிலையங்கள் திறக்கப்பட்டன.  நாட்டின் பிற பகுதிகளில் நூற்றுக்கணக்கானவை இருந்தன என்று பிபிசி அறிக்கை தெரிவிக்கிறது.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47