மங்களவை நினைவுகூருதல்

Published By: Gayathri

06 Sep, 2021 | 02:13 PM
image

கொவிட் நோயினால்  ஆகஸ்ட் 24 திகதி காலமான மங்கள சமரவீர தாராளமய சிந்தனைகளைக் கொண்ட  பிரபல்யமான ஒரு அரசியல்வாதி.

இரண்டு தடவைகள் வெளியுறவு அமைச்சராக பதவிவகித்த அவர் நல்லாட்சி அரசாங்கத்தில் நிதியமைச்சராகவும் இருந்தவர். 

ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலும் பிறகு ஐக்கிய தேசிய கட்சியிலும் இருந்தபோதிலும், தனது மூன்று தசாப்தகால அரசியல் வாழ்வில் சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு எதிரான ஒரு லிபரல் ஜனநாயகவாதியாக உறுதியான நம்பிக்கைக்கொண்ட அரசியல்வாதியாக விளங்கினார்.

2020 பாராளுமன்றத் தேர்தலில் அவரது மாத்தறை மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு சமகி ஜனபலவேகயவினால் வேட்பாளராக மங்கள நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், அவர் தேர்தலுக்கு முன்னர் போட்டியில் இருந்து விலகிக்கொண்டார்.நிறைவேற்று அதிகாரபீடம், இராணுவம் மற்றும் மதகுருமாரின் ஒரு வெறித்தனமான கூட்டாக எதேச்சாதிகாரத்தை நோக்கி நாடு சென்றுகொண்டிருப்பதால் ஜனநாயகத்தின்  மீது மீளப்பற்றுறுதி கொள்ளவேண்டிய தேவை இருப்பதன் காரணத்தினாலேயே தேர்தலில் இருந்து விலகியதாக மங்கள அறிவித்தார்.

நவீன உடையலங்காரவியலை லண்டனில் கற்றவரான அவர் ஓரினச் சேர்க்கையாளர்களின் இயக்கத்தின் வெளிப்படையான ஒரு ஆதரவாளர்.

பாலியல் உறவுகள் சம்பந்தமாக தற்போது நடைமுறையில் இருக்கும் பழமைவாய்ந்த சட்டங்கள் மாற்றப்படவேண்டும் என்ற அவர்களது கோரிக்கையை மங்கள முழுமையாக ஆதரித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் மங்களவின் பங்களிப்பை பற்றி இரத்தினச் சுருக்கமாக கூறியிருந்தார்.

"2015 ஆம் ஆண்டில் வெளியுறவு அமைச்சர் என்ற வகையில் மங்கள நீதி,  பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் நோக்கி அயராது பாடுபட்டார். இனம், மொழி, மதம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றுக்கு அப்பால் சகல பிரஜைகளும் சமத்துவமானவர்களாக வாழக்கூடிய ஒரு இலங்கையே மங்களவின் நோக்கு" .

அவரது மறைவு சிந்தனைத்தெளிவுடனான நம்பிக்கை அரசியலுக்கு பேரிழப்பாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13