கைப்பற்றப்பட்ட 290 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளின் பின்னணி தொடர்பில் சந்தேகம்

Published By: Gayathri

06 Sep, 2021 | 01:58 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கரையிலிருந்து 740 கடல் மைல் தூரத்தில் (1370 கிலோ மீட்டர்கள்) மாலை தீவை அண்மித்த தெற்கு சர்வதேச கடலில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளில் 336 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதி கொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பறப்பட்ட போதைப்பொருள் இருந்த வெளிநாட்டு மீன்பிடி படகானது  முழு தெற்காசிய பிராந்தியத்துக்கும் போதைப்பொருள் விநியோக்கிகும் நடவடிக்கையில் ஈடுபடும் படகா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.



குறித்த படகின் விசாலம் மற்றும்  அந்த படகு சர்வதேச கடற்பரப்பில் நிலை கொண்டிருந்த முறைமை ஆகியவற்றை வைத்து இந்த சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அது தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட 4  பாக்கிஸ்தானியர்கள், 3 பலூசிஸ்தான்  நாட்டவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


இந்நிலையில் தனிமைப்படுத்தல் காலம் நிறைவுற முன்னர் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுப்பது சவாலாக மாறியுள்ளது.


எவ்வாறாயினும் ஏனைய அறிவியல் தடயங்கள மையப்படுத்திய விசேட விசாரணைகள் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜே.ஏ.யு.பி. ஜயசிங்கவின் மேற்பார்வையில் அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சாமந்த விஜேசேகரவின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி பேருவளைக்கு அப்பாலுள்ள  ஆழ்கடலில், நாட்டுக்குள் 290 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளினை கடத்தி வரும்போது உள் நாட்டு மீன்பிடி படகொன்றுடன் 5 சந்தேகநபர்கள் சிக்கினர். 


அந்த படகில் இருந்த 5 பேரும் தற்போது தடுப்புக் காவலின் கீழ் உள்ள நிலையில், அவர்கள் நேற்று கொழும்பு துறைமுகத்திற்கு வரப்பட்ட வெளிநாட்டு மீன் பிடி படகிலிருந்தே ஹெரோயினை பெற்றுக்கொண்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

போதைப்பொருள் பொதி செய்யப்பட்ட முறைமை மற்றும் சில காரணிகளை முன்வைத்து இந்த சந்தேகம் எழுந்துள்ள நிலையில் அது குறித்து தீவிர விசாரணைகள் இடம்பெறுகின்றன.

ஆகஸ்ட் 30 ஆம் திகதி கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் பின்னணியில், டுபாய்க்கு தப்பிச் சென்று மறைந்து வாழும், சர்வதேச பொலிஸாரின் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள பாதாள உலக குழு உறுப்பினர் கொஸ்கொட சுஜீ இருப்பதாக வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அது குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.



இந் நிலையிலேயே இவ்விரு சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களுக்கு இருக்கும் தொடர்புகுறித்து உறுதி செய்ய விஷேட விசாரணைகள் இடம்பெறுகின்றன.


முன்னதாக மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் தாரக சுபோதவுக்கு சர்வதேச போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பில் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. 


போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய நிலையில், அண்மையில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் சிலர் போதைப்பொருள் வர்த்தகம் செய்து சிக்கியிருந்தனர். 


இதனால் சிலர்  சி.ஐ.டி.யால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் அங்கு  நீண்ட நாட்களாக சேவையில் இருந்த பல திறமையான அதிகாரிகள்  இடமாற்றப்பட்டனர். 


அதன் பிரகரமே தாரக சுபோத எனும் பொலிஸ் பரிசோதகரும் மட்டக்களப்புக்கு இடமாற்றப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த அதிகாரி தனக்கு கிடைத்த தகவலை, மிக நீண்ட நாட்களாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவை வழி நடத்திய, அனுபவம் மிக்க, தற்போது கிழக்கின்  சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக செயற்படும் கமல் சில்வாவிடம் தெரிவித்துள்ளார். 


இதனையடுத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வாவின் அறிவுறுத்தலுக்கு அமைய, மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் கருணாரத்ன,  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சுதத் மாசிங்க ஆகியோர் ஊடாக சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.



அதற்கமைய கடற்படையினரும் அத்திட்டத்தில் இணைக்கப்பட்டு, கடலில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு செய்த அனுபவம் மிக்க பொலிஸ் பரிசோதகர் சுபோதவின் தலைமையில்  குழு கடற்படையுடன் இணைந்து செயற்பட்டுள்ளது.

அதன்படியே கடற்படையின் சமுத்ரா கப்பலில், தெற்கு சர்வதேச கடற்பரப்பில் மாலை தீவை நோக்கிய பகுதியில் கடும் கண்காணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி முதல், சமுத்ரா கப்பல் கண்காணிப்பில் ஈடுபட்ட நிலையில் கடந்த முதலாம் திகதி, ஈரான் படகு என சந்தேகிக்கப்படும் சந்தேகத்துக்கு இடமான  பாரிய மீன்பிடி கப்பல் சிக்கியுள்ளது. அக்கப்பலை  சோதனை செய்த போதே அங்கு ஹெரோயின் இருப்பது கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04