இன்று இறுதி செய்யப்படவுள்ள சம்பந்தனின் ஐ.நா.வுக்கான கடிதத்தின் வரைவு : சுமந்திரன்

Published By: Digital Desk 2

06 Sep, 2021 | 12:40 PM
image

ஆர்.ராம்

இலங்கையில் நல்லிணக்கத்தினையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தல் என்ற தலைப்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டிற்கு அனுப்பி வைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் தயாரிக்கப்பட்ட கடிதத்தின் வரைவானது இன்று திங்கட்கிழமை இறுதி செய்யப்படவுள்ளதாக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதமானது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் கருத்துகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு அவசியம் ஏற்பட்டால் மாற்றங்களை மேற்கொண்டு இறுதி செய்யப்பட்டு இன்றைய தினமே ஐ.நா.உயர்ஸ்தானிகருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

முன்னதாக, குறித்த கடிதத்தின் வரைவானது கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள், மற்றும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் அது ஊடகங்களில் கசிந்திருந்தது.

அத்துடன், குறித்த கடிதத்தில் ஐ.நாவின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கையின் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக நியமித்த குழுவினால் கண்டறியப்பட்ட விடயங்களில் ஒன்றான தமிழீழ விடுதலைப்புலிகளும், இலங்கை இராணுவமும் இறுதிப்போரின் போது மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்களில் ஈடுபட்டனர் என்று குறித்துரைக்கப்பட்ட விடயம் உள்வாங்கப்பட்டிருந்தமை உள்ளீர்க்கப்பட்டிருந்தது வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

இதனால் குறித்த கடிதம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்படுத்தப்பட்ட தோடு இக்கடிதத்தின் பின் இணைப்பாக சுயாதீன ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையை இணைக்கும் செயற்பாடும் பலத்த கண்டனங்களுக்கு உள்ளாகியிருந்தது.

இந்நிலையில் இக்கடிதத்தின் வரைவு இன்று இறுதி செய்யப்படவுள்ள நிலையில் கூட்டமைப்பின் தலைவர் எவ்விதமான முடிவினை எடுக்கவுள்ளார் என்பதும் யார் யார் கையொப்பங்களை இடவுள்ளனர் என்பதும் பலத்த எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்த் தேசிய அரசியல் தரப்புக்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் புத்திஜீவிகள் கூறியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13