பிரேஸில் - ஆர்ஜென்டீனா இடையேயான உலகக் கிண்ண தகுதி ஆட்டத்தில் பரபரப்பு

Published By: Vishnu

06 Sep, 2021 | 09:18 AM
image

பிரேஸில் மற்றும் ஆர்ஜென்டினா இடையேயான உலகக் கிண்ண தகுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை திடீரென இடைநிறுத்தப்பட்டது.

Soccer Football - World Cup - South American Qualifiers - Brazil v Argentina - Arena Corinthians, Sao Paulo, Brazil - September 5, 2021 Argentina's Lionel Messi is seen as play is interrupted after Brazilian health officials objected to the participation of three Argentine players they say broke quarantine rules

கொவிட்-19 பரவுவதைத் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை நான்கு வீரர்கள் மீறியுள்ளதாக அதிகாரிகள் தீர்மானித்ததின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிரேஸிலிய அதிகாரிகள் ஆர்ஜென்டினா அணியைச் சேர்ந்த நான்கு பிரீமியர் லீக் வீரர்களைத் தனிமைப்படுத்தியிருந்தனர்.

அவர்கள் கொவிட்-19 தடுப்பு விதிமுறைகளை மீறியதாகக் கூறப்படுகிறது. 

இவ்வாறு தனிமைப்படுத்தல் விதிகளை மீறியவர்களான எமிலியானோ புவேண்டியா, எமிலியானோ மார்டினெஸ், கிறிஸ்டியானோ ரோமெரோ மற்றும் ஜியோவானி லோ செல்சோ - அனைவரும் உலகக் கிண்ண தகுதிச் சுற்றுக்காக  இங்கிலாந்திலிருந்து பிரேஸிலுக்கு பயணம் செய்தவர்கள் ஆவர்.

சம்பவம் தொடர்பில் வெளியான காணொளிக் காட்சிகள், 

பிரேசில் மற்றும் ஆர்ஜென்டினா அணிகளுக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை உலகக் கிண்ண தகுதிச் சுற்று ஆட்டம் சாவோ பாலோ மைதானத்தில் இடம்பெறும் ‍வேளையில் வீரர்களை தனிமைப்படுத்த பிரேசிஸிலிய சுகாதார அதிகாரிகள் ஆடுகளத்தை ஆக்கிரமித்ததையும், சுகாதார அதிகாரிகள் குழுவைச் சுற்றி வீரர்கள் திரண்டிருப்பதை வெளிக்காட்டியது.

ஆட்டம் நிறுத்தப்பட்டவுடன் ஆர்ஜென்டினாவின் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறினர். போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் இந்த நிகழ்வு நடந்தது.

இடை நிறுத்தப்பட்ட போட்டி‍ மீண்டும் தொடங்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05