மீண்டும் வலுப்பெறும் இராணுவ அதிகாரம்

Published By: Digital Desk 2

05 Sep, 2021 | 06:37 PM
image

சுபத்ரா

கொரோனா நெருக்கடிகள், உணவுப்பொருள் விநியோக நெருக்கடிகளுக்கு மத்தியில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராணுவ அதிகாரத்துவத்தை மேலும் விரிவுபடுத்தியிருக்கிறார்.

பைசர் தடுப்பூசிகளை கையாளும் பொறுப்பு சுகாதார அமைச்சிடம் இருந்து விலக்கப்பட்டு, முற்று முழுதாக அது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகமாக, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நிவுன்ஹெல்ல நியமிக்கப்பட்டிருக்கிறார்.

நாட்டில் தற்போதுள்ள ஒழுங்கற்ற நிலையைச் சாட்டாக வைத்துக் கொண்டு இவற்றுக்குள் நுழைக்கப்பட்டிருக்கிறது இராணுவ அதிகாரம்.

உலகின் மிகச்சிறந்த செயற்திறன் மிக்க கொரோனா தடுப்பூசியாக கருதப்படுவது பைசர். 

ரஷ்யாவின் ஸ்புட்னிக்கின் செயற்திறன் அதிகம் எனக் கூறப்பட்டாலும், பைசர் தான் உலகளவில் பெயர் பெற்றுள்ளது.

இலங்கைக்கு அமெரிக்காவிடம் இருந்து கொவாக்ஸ் திட்டத்தின் கீழ் பைசர் மற்றும் மொடேர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சீனாவிடம் இருந்து வரையறையின்றிக் கிடைத்துக் கொண்டிருக்கின்ற சினோபார்ம் தடுப்பூசிக்குஇணையான அளவில் இல்லாவிட்டாலும், கடந்த இரண்டு மாதங்களில் 1.6 மில்லியன் பைசர் மற்றும் மொடேர்னா தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அவற்றைப் போட்டுக் கொள்வதற்கும் மக்களிடையே ஆர்வம் அதிகம்.

போடப்படும் தடுப்பூசியை யாரும், தேர்வு செய்ய முடியாது என்று அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

ஆனாலும், தடுப்பூசி விநியோகத்தில் குழறுபடிகள் நடந்து கொண்டிருப்பதாகவே ஆரம்பத்தில் இருந்து செய்திகள் வெளியாகின்றன.

அவ்வாறான ஆர்வத்தினால் தான், புத்தளத்தில் மருத்துவர் ஒருவர், 18 வயதுக்குட்பட்டசிறுவருக்கும் தடுப்பூசி செலுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-09-05#page-3

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04