சைவ மங்கையர் வித்தியாலய மாணவத் தலைவியரின் " மினெர்வா " ஓர் மாபெரும்  நிகழ்நிலை  முயற்சி!!!

Published By: Digital Desk 2

05 Sep, 2021 | 12:16 PM
image

" சிறந்த தலைமையின் அடையாளம் எத்தனை பேர் பின் தொடர்கிறார்கள் என்பதை விட எத்தனை தலைவர்களை உருவாக்குகிறார்கள் என்பது தான். " அந்த வகையில் மாணவத் தலைவியர்களை உருவாக்கி வருகின்ற கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலய மாணவத் தலைவியர் ஒன்றியத்தின் 2021 உன்னத முயற்சியின் விளைவால் பதித்த வரலாற்றுத் தடங்கள் பற்றிய ஓர் பார்வை.......

சைவ  மங்கையர் வித்தியாலய மாணவத்தலைவியர் ஒன்றியம் 2021 ஆனது பாடசாலை சமூகத்தினால் ஒருமுகமாக தெரிவு செய்யப்பட்ட 45 திறமையான  மாணவர் தலைவியர்களுடன் ஆகஸ்ட் 19, 2020 அன்று தங்கள் தலைமத்துவ பயணமதை ஆரம்பித்தனர். 

தங்கள்  பயணத்தின் முதற்படிக்கல் ஆக , அதிபர் திருமதி அருந்ததி இராஜவிஜயன் மற்றும் முன்னாள் மாணவத்தலைவியர் ஒன்றியப் பொறுப்பாசிரியர்கள் திருமதி சுரனுதா ஜெயரூபன் மற்றும் திருமதி.ராதிகா பேரின்பம் அவர்களின்  வழிகாட்டுதலின் கீழ் ரோட்ராக்ட் கிளப்பினால்  (Rotaract Club) ஒழுங்கு செய்யப்பட்ட டைட்டன்  (Titan Games)உலகின் முதலாவது சமூக சேவைக்கான போட்டி நிகழ்ச்சியில் முதலாமிடத்தைச் தட்டிச் சென்றதுடன்  ரூபா 150 000 பணத்தொகையினை  பெற்றுக் கொண்டமையும்  குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு 2020ம் ஆண்டு தங்கள் பள்ளிக்காலங்களில்  பொறுப்புடன்  செயற்பட்டதுடன், பாடசாலை சமூகத்தின் உதவியுடன் தங்கள் தலைமைத்துவ  பண்புகளையும் வளர்த்துக் கொள்ளத் தவறவில்லை.

2021 மார்ச் 25 அன்று தொடக்கம் சிரேஷ்ட மாணவத்தலைவர்களாய்  தங்கள் பணியை செவ்வனே ஆற்றத் தொடங்கினர். அதன்படி தங்களது மாணவத்தலைவியர் ஒன்றிய அறையை (The Prefects’ Chamber) தங்கள் கைவண்ணங்களால்  மெருகூட்டி திறந்து வைத்தனர். 

நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டாலும், பள்ளிக்கு மேலும் பெருமை சேர்க்கும் வண்ணம் பள்ளி சமுதாயத்திற்கு சேவை செய்வதற்கான தங்கள் திறனை நிரூபிக்க அவர்கள் ஒரு போதும் இடைநிறுத்தப்படவில்லை.

மாணவர் சமுதாயத்தின் மன ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில் நேர் எண்ணங்களை பரப்புவதுடன் மாணவர்களின் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் " ஹீவ் தி ப்ளூஸ் " (Heave the Blues) என்ற தொனிப்பொருளுக்கமைய தங்கள் முயற்சியினை அவர்கள் தொடங்கினர். 

அதன்படி அர்த்தமுள்ள ஆவணப்படங்கள் மற்றும் காட்சிப்படங்கள் போன்றவை அவர்களால் நிகழ்நிலை மூலமாக பள்ளி மாணவர்களிடையே பகிரப்பட்டன.

அடுத்த கட்டமாக, எண்கள் பள்ளியின் 9, 10, மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதன் முதலாக நிகழ் நிலை போட்டி வேடிக்கை முகாமினை மினெர்வா  (Minerva) , மதிப்புக்குரிய முகாமையாளர் திருமதி சிவநந்தினி துரைசாமி, அதிபர் திருமதி. அருந்ததி இராஜவிஜயன் மற்றும் மாணவத்தலைவியர் ஒன்றிய பொறுப்பாசிரியர்கள் திருமதி.அல்லி தில்லை நடராஜா மற்றும் திருமதி மலர்விழி ஸ்ரீகுமார் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 14 ஜூன் 2021 அன்று தொடங்கினர். 

இந்த ஒரு மாத கால நிகழ் நிலை முகாமில் மாணவர்களின் தனித்துவமான மற்றும் ஆக்கபூர்வ திறமைகளை ஆராய வினாடி-வினா , ஆவணப்படம் தயாரித்தல், விமர்சனம் எழுதுதல், சித்திர போட்டிகள், கைவினை தயாரித்தல் போன்ற பல்வேறு போட்டிகளை நடத்தி இணைப்பாடவிதான நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்தி அவர்கள் திறமைகளுக்கு களம் அமைத்துக் கொடுத்தனர். 

மேலும் மாணவர்களை ஊக்கப்படுத்த வார நாட்களில்  தினசரி போனஸ் குழு செயற்பாடுகள் மற்றும் வார இறுதிகளில் பயனுள்ள செயலமர்வுகளை நடத்தினர். 

முகாமின் இடையே வழங்கப்பட்ட ஒரு வார இடைவெளியின் பின்னர் ஓர் புதிய பரிமாணத்திர்க்கமைய தெரிவு செய்யப்பட்ட 16 வகுப்புகளுக்கிடையே சுவாரஷ்யமான போட்டிகள் நடத்தப்பட்டன. 

மாணவர்கள் தங்கள் கூட்டு முயற்சியுடனும் ஒற்றுமையுடனும் அனைத்து போட்டிகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். வார இறுதி  செயலமர்வுகள் , முகாமின் மிகவும் முக்கியமான பகுதியாகும்.  

ஏனெனில் இது மாணவர்களின் பல்வேறு திறன்களை  மேம்படுத்தியதுடன் மன அழுத்தங்களிலிருந்து விடுபடவும் உதவியாக இருந்தது. இச்  செயலமர்வுகளை , திருமதி லக்ஷ்மி செந்தில்நாதன், திரு.ரோமேதா  தோராதெனிய ,முன்னாள்  உப மாணவ விளையாட்டுத்தலைவி  செல்வி பவித்ரா ரமணீஹர சர்மா  மற்றும் மாணவத்தலைவியர் ஒன்றியம் 19/20 ஆகியோரால் நெறிப்படுத்தி நடத்தப் பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

முகாமின் இறுதிப்பகுதியில் சுவாரசியமானதும் ,எமது மாணவத்தலைவியரின் கற்பனையால் உருவாக்கப்பட்ட கொலை மர்மங்களை  கண்டுபிடிக்கும் விறுவிறுப்பான போட்டி  தொடர்கள்  zoom செயலி  மூலம் நடாத்தப்பட்டு முதல் 6 வகுப்புக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. 

ஒரு மாதகாலத்திற்கு மேலாக சுமார் 40 நாட்கள் நடாத்தப்பட்ட இம்முகாமின் இறுதிநாள் ஆகஸ்ட் 8 ஆம் திகதி மினெர்வாவின் "ADIEU : The Conclusion " நிகழ்நிலையூடாக வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. 

ஒவ்வொரு வகை போட்டிகளிலும் சிறப்பாக செயற்பட்ட வகுப்புகள் மற்றும் மாணவிகளுக்கு சிறந்த செயல்திறனிற்கான விருதுகள் வழங்கப்பட்டதுடன் இந்த 16 வகுப்புகளுக்கும் ஒவ்வொரு போட்டிகளிலும் அவர்கள் பெற்ற புள்ளிகளும் காட்சிப்படுத்தப்பட்டன.

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அயராத முயற்சிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் நிகழ்நிலை ஊடாக கொண்டாடப்பட்ட இறுதி நாள் நிகழ்வின் பிரதமர விருந்தினராக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திரு. சிவக்கொழுந்து ஸ்ரீசற்குணராஜா அவர்களும் சிறப்பு விருந்தினராக LIGHT அறக்கட்டளையின் நிறுவனர் திருமதி ஜதுஷா மகேந்திரராஜன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். 

பாடசாலை முகாமைய, அதிபர், பிரதி அதிபர், உப அதிபர்கள்,பொறுப்பாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் போன்றவர்களின் உதவியுடன் மாணவத்தலைவியர் ஒன்றியத்தினால் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்நிலை முகாம், மினெர்வாவின் 40 நாட்கள் பயணம் பாடசாலையின் வரலாற்றில் மறக்கமுடியாத மைல்கல்லாக மாறியுள்ளது எனலாம். 

உலகில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில் தங்கள் பள்ளி வாழ்க்கையை அனுபவிக்கத் தவறிவரும் மாணவர்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் இது போன்ற நிகழ்நிலை நிகழ்வுகளை நடாத்திவருவது வரவேற்கத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08