உலகின் முன்னணி சர்வதேச அதிவேக சேவை வழங்குநரான DHL Express நிறுவனம், Stevie® Award 2016 விருதுகள் வழங்கும் நிகழ்வின் வாடிக்கையாளர் சேவைப் பிரிவின் கீழ் அதன் இலங்கை வாடிக்கையாளர் சேவைக் குழுவினர் வெற்றிவாகை சூடியுள்ளதாக அறிவித்துள்ளது. 

‘வருடத்திற்கான சிறந்த வாடிக்கையாளர் சேவைப் பிரிவு’ இற்கான வெள்ளி விருதையும்,‘வருடத்திற்கான வாடிக்கையாளர் சேவை குழு’ இற்கான வெண்கல விருதையும் DHL Express ஸ்ரீலங்கா வென்றெடுத்துள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி இத்தாலி தலைநகர் ரோமில் வெற்றியாளர்களை கௌரவிப்பதற்கான மாபெரும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

‘Stevie விருதுகள் போன்ற முக்கிய போட்டியில் எமது வாடிக்கையாளர் சேவை குழு கௌரவிக்கப்பட்டமையானது எமக்கு பெருமையளிப்பதாக உள்ளது. 

தொடர்ச்சியாக அவர்கள் வழங்கிவரும் தரமான சேவை மற்றும் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதற்கான விபரங்கள் மீது காட்டும் அக்கறை போன்றவற்றை இது உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது” DHL Express ஸ்ரீலங்கா நிறுவனத்தின் இலங்கைக்கான தலைமை செயற்பாட்டு அதிகாரி திமித்ரி பெரோரா தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக, உலகின் ஒரேயொரு வர்த்தக விருதுகள் திட்டமான “ சர்வதேச Stevies’ அல்லது ‘சர்வதேச வர்த்தக விருதுகள்’ இல் வெற்றியாளராக DHL Express ஸ்ரீலங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்று உலகின் முன்னணி வர்த்தக அங்கீகாரமாக கருதப்படும் Stevie® விருதுகள் ஊடாக, சர்வதேச ரீதியிலான நிறுவனங்கள், நிபுணர்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகள் கௌரவிக்கப்பட்டு வருகின்றன.

60 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3800 இற்கும் அதிகமான வேட்பாளர்கள் மத்தியில், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல ஸ்டீவீ விருதுகளுக்கான வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

தேசத்திற்கு ஈடிணையற்ற சரக்கியல் சேவைகளை வழங்கி வருவதில் மூன்று தசாப்தத்திற்கும் மேற்பட்ட அனுபவத்தை கொண்டுள்ள DHL Express ஸ்ரீலங்கா நிறுவனம் வென்ற இந்த விருதுகள், எமது வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான எமது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு போன்றவற்றை சான்று பகர்வதாக அமைந்துள்ளது. 

சேவை தலைமைத்துவத்தின் பல்வகைமை ஊடாக DHL Express ஸ்ரீலங்கா தன்னை வேறுப்படுத்திக் காட்டிக்கொண்டுள்ளதுடன் அதன் வாடிக்கையாளருக்கு தரமான சேவைகள் வழங்குவதில் மேம்பட்ட நிலையை எய்தியுள்ளது.

அதன் உலகளாவிய செயற்பாடுகளின் பெறுமதிக்கு இணையாக, இலங்கையின் DHL வர்த்தகநாமமானது அர்ப்பணிப்பு மற்றும் அதிவேகத்தை கடைபிடிப்பதில் பெருமை, உத்வேகம், முடிக்கலாம் எனும் மனப்பான்மை போன்ற விதிகளை பின்பற்றி வருகிறது. 

எமது பெறுமதிமிக்க வாடிக்கையாளருக்கு நாம் வழங்கிவரும் மிகச்சிறந்த சேவைக்கான அங்கீகாரமே இந்த ஸ்டீவ் விருதுகள்;” என பெரேரா தெரிவித்தார்.

DHL Express  ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தேசிய வாடிக்கையாளர் சேவை முகாமையாளரான விக்கி மெரியன் கருத்து தெரிவிக்கையில்,

“வெள்ளி மற்றும் வெண்கல விருதுகளை வென்றமையானது மிகவும் அற்புதமான சாதனையாக உள்ளதுடன் வாடிக்கையாளர்களே எமது மிக முக்கிய முன்னுரிமை என்பதற்கான அடையாளமாகவும் விளங்குகின்றது.

சேவை விநியோகிப்பின் போது எமது குழுவின் முயற்சிகள் குறித்து நான் பெருமையடைவதுடன்ரூபவ் இந்த விருதை பெற்றுக்கொள்வதற்கு பங்களிப்பு வழங்கிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.