ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் - அமெரிக்க உயர் தளபதி எச்சரிக்கை

Published By: Vishnu

05 Sep, 2021 | 09:48 AM
image

தலிபான்கள் அதிகாரத்தை ஒருங்கிணைக்கத் தவறினால் நாட்டில் போரிடும் ஏனைய பிரிவுகளுடன் விரைவில் ஆப்கானிஸ்தானில் "உள்நாட்டுப் போர்" வெடிக்கும் என்று அமெரிக்க உயர் தளபதி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்தகைய வளர்ச்சி அல்-காய்தாவின் மீள் எழுச்சிக்கு வழி வகுக்கும் என்றும் கூட்டுத் தலைவர்களின் தலைவராக பணியாற்றும் அமெரிக்க உயர்மட்ட ஜெனரல் மார்க் மில்லே தெரிவித்துள்ளார்.

Chairman of the Joint Chiefs Chairman Gen. Mark Milley testifies before a Senate Appropriations Committee hearing to examine proposed budget estimates and justification for fiscal year 2022 for the Department of Defense in Washington on Thursday, June 17, 2021.

ஜேர்மனியின் ராம்ஸ்டைன் விமான தளத்தில் சனிக்கிழமை ஃபாக்ஸ் நியூஸ் ஊடகவியலாளருடனான ஒரு பிரத்யேக தொலைக்காட்சி நேர்காணலின்போதே அவர் இதனைக் கூறினார்.

இந்த நேர்காணலின் பின்னர் ஆப்கானிஸ்தானின் கடைசி மாகாணமான காபூலுக்கு வடக்கே உள்ள பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கை கட்டுப்படுத்த தலிபானும் எதிரணிப் படைகளும் சனிக்கிழமை போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இரு தரப்பினரும் பஞ்ச்ஷிரில் முன்னிலை பெற்றதாகக் கூறினார்கள் ஆனால் அதை நிரூபிக்க உறுதியான ஆதாரங்களை வெளியிடவில்லை.

கடந்த வாரம் அமெரிக்க தலைமையிலான படைகள் இறுதி வாபஸ் பெறுவதற்கு முன்னதாக நாடு முழுவதும் பரவிய தலிபான்கள் 1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தபோதும் குறித்த பள்ளத்தாக்கை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதேவேளை ஆப்கானிஸ்தானின் ஒரு சிறிய குழு காபூலின் தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள வீதிகளில் சனிக்கிழமையன்று சம உரிமைகள் மற்றும் அரசாங்கத்தில் பங்கேற்கும் திறனைக் கோரியுள்ளது.

Taliban guards intervene against women holding a demonstration in Kabul on September 4, 2021.

போராளிக் குழுவின் ஆட்சிக்கு ஒரு துணிச்சலான பொது சவாலாக, பெண் ஆர்வலர்கள் கடந்த வாரத்தில் ஆப்கானிஸ்தான் முழுவதும் குறைந்தது மூன்று சிறிய ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.

இதனிடையே ஆப்கானிஸ்தான் செய்தி வலையமைப்பான டோலோ சனிக்கிழமை பகிர்ந்த காட்சிகள், தாலிபான் காவலர்களுக்கும் சில பெண்களுக்கும் இடையே மோதலை வெளிக்காட்டியுள்ளது.

பெண்களின் அரண்மனைக்கான அணிவகுப்பதை தலிபான் படைகள் தடுத்ததால் வன்முறை வெடித்ததாக கூறப்படுகிறது, 

போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் செய்யப்பட்டதாகவும் டோலோ தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47