பரா ஒலிம்பிக்கின் தங்க மகனுக்கு 5 கோடி ரூபா பணப்பரிசு

Published By: Digital Desk 2

04 Sep, 2021 | 03:59 PM
image

எம்.எம்.சில்வெஸ்டர்

டோக்கியோ பரா ஓலிம்பிக்கில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை தேடிக்கொடுத்த தினேஷ் பிரியன்தவுக்கு விளையாட்டுத் துறை அமைச்சினால் 5  கோடி ரூபா பணப்பரிசு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, இலங்கை விளையாட்டு துறை வரலாற்றில் தனிநபர் விளையாட்டுப் பிரிவில் வெற்றியீட்டிய ஒருவருக்கு  வழங்கப்படவுள்ள அதிகூடிய பணப்பரிசுத் தொகையாக இது விளங்கும்.

மேலும்,பராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்த துலான் கொடிதுவக்குவுக்கு 2 கோடி ரூபா பணப்பரிசும், பயிற்றுநரான பிரதீப் நிஷாந்தவுக்கு ஒரு கோடியே 75 இலட்சம் ரூபா  வழங்குவதற்கும் விளையாட்டுத் துறை அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தினேஷ் பிரியன்த, துலான் கொடிதுவக்கு உள்ளிட்ட இலங்கை மெய்வல்லுநர் குழாம்  எதிர்வரும் 7 ஆம் திகதி தாய் நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35