இலங்கை தொடர்ந்தும் சிவப்பு வலையத்தில் : தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடித்தமை சரியான தீர்மானம் : இலங்கை வைத்தியர்கள் சங்கம்

Published By: Digital Desk 2

04 Sep, 2021 | 01:53 PM
image

ஆர்.யசி

இலங்கையில் டெல்டா வைரஸ் பரவல் மிக மோசமான நிலையை எட்டியுள்ள நிலையில் இலங்கை தொடர்ந்தும் கொவிட் பரவல் பட்டியலில் சிவப்பு வலையமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வைத்தியர்கள்சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன சுட்டிக்காட்டுவதுடன், மேலும் ஒருவார காலம் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீட்டித்தமை சிறந்த தீர்மானம் எனவும் கூறினார்.

நாட்டில் வேகமாக டெல்டா வைரஸ் பரவிக்கொண்டுள்ள நிலையில், எதிர்வரும் 13 ஆம் திகதி அதிகாலை நான்கு மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிக்க கொவிட் செயலணிக்கூட்டத்தில் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இது குறித்து தெரிவிக்கும் போது வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன மேலும் கூறுகையில்,

இலங்கை இன்னமும் கொவிட் -19வைரஸ் அச்சுறுத்தல் நாடுகளின் பட்டியலில் பிரதான இடத்தில் உள்ளது. நாட்டில் சகல பகுதிகளிலும் கொவிட் வைரஸ் பரவல் காணப்படுகின்றது. நாளாந்த மரணங்கள், வைரஸ்தொற்றாளர்களின் எண்ணிக்கை என்பவற்றை அவதானிக்கும் போது இன்னமும் இலங்கை சிவப்புவலையத்திலேயே உள்ளது. இந்த நிலைமையில் இருந்து விடுபட வேண்டுமென்றால் நாளாந்த கொவிட்தொற்றாளர்களின் எண்ணிக்கை 950க்கு குறைவாக பதிவாக வேண்டும். அதேபோல் கொவிட் மரணங்களும்2.5 வீதத்திற்கு குறைவாக பதிவாக வேண்டும். அவ்வாறான நிலையொன்று ஏற்பட்டால் மட்டுமே பாதுகாப்பானசூழல் நாட்டில் உள்ளதென அறிவிக்க முடியும். ஆகவே தான் தற்போது நாட்டில் டெல்டா வைரஸ் பரவல்நிலைமையை அடுத்தும், புதிய வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமைகளை அடுத்தும் மேலும் இருவாரகாலம்நாட்டை முடக்கி வைரஸ் பரவலை தடுக்க நடடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

ஆகவே மேலும் ஒருவாரகாலம் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை நாம்வரவேட்கின்றோம். இப்போதுள்ள நிலையில் நாட்டை முடக்குவதே இருக்கும் ஒரே தீர்வாகும்.நாட்டைவழமைபோன்று செயற்பட அனுமதித்து வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியாது. அதேபோல் ஊரடங்கு எனஅறிவித்துவிட்டு மக்களின் நடமாட்டத்திற்கு இடமளிக்காது சுகாதார வழிமுறைகளை கடுமையாக்க வேண்டும். அதேபோல் மீண்டும் நாடு திறக்கப்பட முன்னர் பல்வேறு புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பாக பொதுப்போக்குவரத்து பயன்பாட்டின் போது புதிய சுகாதார வழிமுறைகளை நடைமுறைப்படுத்தப்படவேண்டும். அளவுக்கு அதிகமாக பொதுமக்கள் பேருந்துகளில், புகையிரதங்களில் செல்வதை தடுக்கவேண்டும்.இவ்வாறு பல்வேறு புதிய நடைமுறைகளை கையாள அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும்அவர் வலியுறுத்தினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55