சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை ஊக்குவிக்குமாறு சுகாதாரத்துறை முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை

Published By: Digital Desk 2

04 Sep, 2021 | 09:27 AM
image

எம்.மனோசித்ரா

மருத்துவ தரப்பினரின் அங்கீகாரம் கிடைத்தவுடன் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசிகளை வழங்க முடியும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

20 - 29 வயதுக்கு இடைப்பட்டோருக்கான தடுப்பூசி வழங்கும் பணிகளை எதிர்வரும் இரண்டு வாரக் காலப்பகுதிக்குள் முன்னெடுப்பதற்கான தேவை தொடர்பிலும் ஜனாதிபதி அவதானம் செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இணையவழி காணொளி சந்திப்பின் ஊடாக இடம்பெற்ற கொவிட் செயலணி விசேட கூட்டத்தின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மாகாண மற்றும் பிரதேச சுகாதாரப் பணிப்பாளர்களும், இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டு, கொவிட் ஒழிப்பு தொடர்பில் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பிலான தகவல்களை முன்வைத்தனர்.

தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது தீர்க்கமாகக் கலந்துரையாடப்பட்டதுடன், 20 - 29 வயதுக்கு இடைப்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றல் நடவடிக்கையை, எதிர்வரும் இரண்டு வாரக் காலப்பகுதிக்குள் முன்னெடுப்பதற்கான தேவை தொடர்பிலும், இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்படும் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க உதவிய சுகாதார, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் ஜனாதிபதி பாராட்டுகளைத் தெரிவித்தார்.

மருத்துவ அங்கீகாரம் கிடைத்தவுடனேயே, பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்ற முடியுமென்றும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.

நாளாந்தம் 400 - 450 க்கு இடைப்பட்ட தடுப்பூசி நிலையங்களில், தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சுகாதாரத் துறையினரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, தடுப்பூசி நிலையங்களுக்கான தடுப்பூசித் தொகை தீர்மானிக்கப்படுகிறது. இருப்பினும், ஒட்டுமொத்தமாக முன்னெடுக்கப்படும் தடுப்பூசி ஏற்றல் பணிகளைப் புறந்தள்ளிவிட்டு, ஓரிரு தடுப்பூசி நிலையங்களில் இடம்பெறும் சில சம்பவங்களைப் பெரிதுபடுத்திக் காட்டுவதற்கு ஊடகங்கள் முன்னெடுக்கும் முயற்சிகள் கவலைக்குரியனவாக உள்ளனவென்று, மாகாண சுகாதாரப் பணிப்பாளர்கள் சுட்டிக்காட்டினர்.

சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு எனும் யதார்த்தத்தைப் புரிந்து, பொருளாதாரத்தைப் பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல அனைத்துத் தரப்பினரும் பொறுப்புணர்வுடன் தீர்மானங்களை எடுக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள போதிலும், தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தின் வெற்றியுடன் ஏற்றுமதித் துறையில் ஈடுபடும் தொழிற்சாலைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க முடிந்தமையானது பொருளாதாரத்துக்குக் கிடைத்த பெரிய ஆறுதலாக உள்ளதென்று நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

 

உலகின் பல நாடுகள், சுற்றுலாத் துறைக்காகத் தமது நாடுகளைத் திறந்துகொண்டிருக்கின்றன. அவ்வாறானதொரு தீர்மானத்தைத் தாமும் எடுப்பதன் மூலம் சிறந்த பயன்களை அடைய முடியுமென்று ஜனாதிபதி இதன்போது எடுத்துரைத்தார்.

கொவிட் ஒழிப்பு வேலைத்திட்டத்துக்குச் சமாந்திரமாக, சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக முன்னெடுக்க வேண்டிய சுகாதார வழிகாட்டல்களை  உடனடியாக முன்வைக்குமாறு, சுகாதாரத்துறை முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57