தென்னாபிரிக்க கொவிட் வைரஸ் பிறழ்வும் இலங்கைக்குள்  நுழையக்கூடும் - எச்சரிக்கிறார் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

04 Sep, 2021 | 07:05 AM
image

(எம்.மனோசித்ரா)

இந்தியா மற்றும் பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட வைரஸ் பிறழ்வுகள் நுழைந்ததைப் போலவே தென் ஆபிரிக்க பிறழ்வும் இலங்கைக்குள் நுழையக்கூடும். 

எனவே இதனை எதிர்கொள்வதற்காக பிரத்தியேக ஏற்பாடுகள் எவையும் இல்லை. ஆரம்பம் முதல் பின்பற்றி வருகின்ற தனிமைப்படுத்தல் விதிமுறைகளையே பின்பற்ற வேண்டும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கொவிட்-19 வைரஸ் பிறழ்வுகள் இந்தியா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளில் இனங்காணப்பட்டாலும் மக்களின் போக்குவரத்து நடவடிக்கைகளின் காரணமாக அந்த பிறழ்வுகள் இலங்கையிலும் பரவத் தொடங்கின.

எனினும் ஆபிரிக்க நாடுகள் இனங்காணப்பட்ட பிறழ்வுகள் இலங்கையில் பரவவில்லை.

எவ்வாறிருப்பினும் ஐரோப்பிய நாடுகள் அல்லது மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்பவர்கள் , அங்கிருந்து வருபவர்கள் ஊடாக எந்தவொரு வைரஸ் பிறழ்வுகளும் நாட்டுக்குள் நுழையக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமுள்ளன. 

எந்த வகையான புதிய பிறழ்வுகள் இனங்காணப்பட்டாலும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கென பிரத்தியேக முன்னேற்பாடுகள் செய்யப்படுவதில்லை.

ஆரம்பத்தில் செய்யப்பட்டதைப் போலவே எந்தவொரு நாட்டிலிருந்து வருபவர்களும் கொவிட் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்படுவர். 

அது மாத்திரமின்றி சகலரும் முகக்கவசம் அணிதல் , சமூக இடைவெளியைப் பேணுதல் உள்ளிட்ட அடிப்படை சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவதே பிரதானமானது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37