திரைப்படமாக தயாராகும் வடமொழி மந்திரச்சொல்

Published By: Gayathri

03 Sep, 2021 | 05:34 PM
image

அத்வைதம் என்னும் ஹிந்து நூலில் இடம்பெறும் 'தத்வமசி' என்ற வாக்கியத்தை தலைப்பாகக் கொண்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் திரைப்படமொன்று தயாராகிறது.

தெலுங்கு திரையுலகின் வெற்றிகரமான முன்னணி கதாசிரியரான ரமணா, இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் 'தத்வமசி'. 

இதில் நடிகர் இஷான் கதையின் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ஷ்யாம் கே நாயுடு ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, சாம் சி எஸ் இசை அமைக்கிறார். 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மும்மொழிகளில் பிரம்மாண்டமான பட்ஜட்டில் தயாராகும் இந்த திரைப்படத்தை RES என்டர்டெயின்மென்ட் எல் எல் பி என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின்  மையக்கருத்தை வலியுறுத்தும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

படத்தைப் பற்றி அறிமுக இயக்குனர் ரமணா பேசுகையில்,' 

தத்வமசி என்பது அத்வைத பாரம்பரியத்தில் இருக்கும் ஒரு வடமொழி மந்திர வாக்கியம். பழங்கால உபநிஷத்தில் இருக்கும் நான்கு பிரதான வாக்கியங்களில் 'தத்வமசி' என்பதும் ஒன்று. 

தனித்துவமான கதைக்களத்துடன் இப்படத்தின் திரைக்கதை தயாராகிறது. பழிவாங்கும் உணர்ச்சி உச்சத்திற்கு செல்லும்போது அதன் ஆற்றலை, எதிரிகளால் எதிர்க்கொள்ள இயலுமா? இயலாதா? என்பதை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை விறுவிறுப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.' என்றார்.

இப்படத்தின் மோஷன் போஸ்டரின் பின்னணி இசை பார்வையாளர்களை கவர்ந்திருப்பதால் எதிர்பார்த்ததைவிட கூடுதலான வரவேற்பை 'தத்வமசி' பெற்றுவருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35
news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03