தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு

Published By: Vishnu

03 Sep, 2021 | 02:58 PM
image

நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு செப்டெம்பர் 13 அதிகாலை 4.00 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கொவிட்-19 தடுப்பு செயலணிக் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

May be an image of text that says 'S PMD விசேட அறிவித்தல்! தற்போது நாட்டில் நடைமுறையில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை, செப்டெம்பர் 13ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நீடிப்பதற்கு, இன்று (08) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கொவிட் ஒழிப்பு செயலணிக் கூட்டத்தின் போது ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.'

இது தொடர்பில்  இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவிக்கையில் ,

நாடளாவிய ரீதியில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை 6 ஆம் திகதி திங்கட்கிழமை நீக்குவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. 

எனினும் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற கொவிட் செயலணி கூட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தினை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நீடிக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. 

அதற்கமைய தற்போது நடைமுறையிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் 13 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 30 வயதுக்கு மேற்பட்டோரில் 88 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு இரு கட்டங்களாகவும் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறிருப்பினும் சில மாவட்டங்களில் தடுப்பூசி வழங்கும் பணிகளில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால் ,  ஞாயிற்றுக்கிழமை நாட்டுக்கு கிடைக்கப் பெறவுள்ள மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளின் ஊடாக குறைபாடுகள் காணப்படும் மாவட்டங்களிலுள்ள பிரச்சினைகளை தீர்க்குமாறு இதன் போது ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

அதற்கமை ஞாயிற்றுக்கிழமை முதல் அடுத்த ஒரு வாரத்திற்குள் சகல மாவட்டங்களிலுமுள்ள 30 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் தடுப்பூசி வழங்கும் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதியின் பின்னர் உருவாகிய புத்தாண்டு கொத்தணியால் பரவிய மூன்றாவது கொவிட் அலையில் நாளாந்தம் ஆயிரக்கணக்கான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதோடு , நூற்றுக்கும் மேற்பட்ட மரணங்களும் பதிவாகின்றன. 

இந்நிலையில் சுகாதாரதரப்பினர் பல துறையினரதும் வலியுறுத்தலுக்கமைய ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

எனினும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி நாட்டு நிலைமையைக் கருத்திற் கொண்டு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் இம்மாதம் 6 ஆம் திகதி நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 

தற்போது மீண்டும் சுகாதார தரப்பினரின் வேண்டுகோளுக்கமைய 13 ஆம் திகதிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04