டிசம்பர் இறுதி வரை கொவிட் அச்சுறுத்தல் : நீண்ட தூர சவால்மிக்க பயணத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது என்கின்றனர் நிபுணர்கள்

Published By: Digital Desk 2

03 Sep, 2021 | 12:59 PM
image

ஆர்.யசி

கொவிட் வைரஸ் பரவல் நிலைமையை கடக்கும் கட்டத்தில் நாம் இல்லை, இன்னும் நீண்ட தூர சவால்மிக்க பயணத்தை நாம் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

டிசம்பர் மாதம் இறுதி வரையில் மிகப்பெரிய சவாலுக்கு நாம் முகங்கொடுக்க நேரும் என இலங்கையில் ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இலங்கையின்  ஒட்டுமொத்த சனத்தொகையில் 70 தொடக்கம் 80 சதவீத மக்களுக்கு தடுப்பூசி ஏற்றினால் மட்டுமே பாதுகாப்பை உணர முடியும் எனவும் தெரிவித்தனர்.

நாட்டில் கொவிட் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலைமைகள் குறித்தும் அடுத்தகட்ட நிலைமைகள் குறித்தும் நிபுணர்களின் அவதானிப்பு தொடர்பில் தெரிவிக்கும் போதே அவர்கள் இதனை கூறினார். இது குறித்து கொழும்பு பல்கலைக்கழக வைத்திய பீட பேராசிரியர் மனோஜ் வீரசிங்ஹ கூறுகையில்,

இலங்கையை பொறுத்தவரையில் கொவிட் வைரஸ் பரவலை சமாளிக்கும் முறையான வேலைத்திட்டங்களை துரிதமாக முன்னெடுக்கவில்லை என்றே கூறவேண்டும்.

தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் மிகச்சிறந்த ஒன்றாகும்.ஆனால் அதனை துரிதப்படுத்த வேண்டும். இப்போது வரையில் நாட்டின் சனத்தொகையில் 30 வீதத்திற்கும் குறைவானவர்களுக்கே தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. 

நாட்டை திறக்க முன்னர் நாட்டின் மொத்தசனத்தொகையில் 70-80 வீதமானவர்களுக்கு இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றினால் மட்டுமே வைரஸ் பரவலில் இருந்து  விடுபட முடியும்.

ஆனால் இலங்கை இன்னமும் அவ்வாறான சூழல் ஒன்றுக்கு இன்னும் தயாரில்லை. நவம்பர் மாதம் இறுதி அல்லது டிசம்பர் மாதம் இறுதிக்குள் குறைந்தது 60வீதமான மக்களுக்கேனும் தடுப்பூசி ஏற்றினால் மட்டுமே நிலைமைகளை கையாள முடியும். இல்லையேல் நாடு திறக்கப்பட்டால் மீண்டும் முடக்கநிலைக்கு தள்ளப்படுவோம்.

அதேபோல் கொவிட் வைரஸ் தொற்றுபரவல் நிலைமை இப்பொது முடிவுக்கு வரப்போகும் ஒரு விடயமல்ல. இப்போது நாம் சகலரும் கொவிட் பரவளின் நடுப்பகுதியில் உள்ளோம்.

இன்னும் நாம் கடக்க வேண்டிய தூரம்அதிகமாகும். அதற்குள் மீண்டும் கொவிட் கொத்தணிகள் உருவாகும். மரணங்கள் பதிவாகும். தொற்றாளர்களின்எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே கொவிட் மரணங்களை தடுக்கவோ அல்லது குறைக்கவோ விரைவாகதடுப்பூசி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08