பதுக்கி வைக்கப்பட்டிருந்த 29 ஆயிரம் மெட்ரிக் தொன் சீனி அரசுடைமையாக்கப்பட்டது

Published By: Gayathri

02 Sep, 2021 | 12:54 PM
image

(எம்.மனோசித்ரா)

களஞ்சியசாலைக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 29,900 மெட்ரிக் தொன் சீனி நேற்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது  கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவை அரசுடமையாக்கப்பட்டதாக அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி.நிவுன்ஹெல்ல தெரிவித்தார்.

முத்துராஜவெல பகுதியில் அமைந்துள்ள பிரமிட் வில்மர் நிறுவனத்தினால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 6,200 மெட்ரிக்தொன் சீனி, 809/5, நீர்கொழும்பு வீதி, மாபோல வத்தளையில் அமைந்துள்ள குளோபல் டிரேடிங்க நிறுவனத்தினால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4,800 மெட்ரிக்தொன் சீனி, 242 உஸ்வட்டகெய்யாவ, வத்தளையில் அமைந்துள்ள குளோபல் டிரேடிங்க நிறுவனத்தினால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4,100 மெட்ரிக்தொன் சீனி, வில்ஸன் டிரேடிங் நிறுவனத்தின் களஞ்சியசாலை தொகுதி 4 இல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 14,000 மெட்ரிக்தொன் சீனி, ஹூணுப்பிட்டி வீதி, கிரிபத்கொட பகுதியில் அமைந்துள்ள ஆர்.ஜி.ஸ்டோர்ஸ் நிறுவனம் பதுக்கி வைத்திருந்த 800 மெட்ரிக்தொன் சீனி என்பன இவ்வாறு அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

இந்தச் சீனித் தொகை கட்டுப்பாட்டு விலையில் அரச மற்றும் தனியார் வர்த்தக நிலையங்களின் ஊடாக நுகர்வோருக்கு விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 

ஒரு கிலோகிராம் சீனிக்காக அறவிடப்பட்ட 50 ரூபாய் என்ற இறக்குமதித் தீர்வை வரியானது, நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், 2020 ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் 25 சதமாகக் குறைக்கப்பட்டது. அன்றைய நாளில், நாட்டுக்குள் 88,878 மெட்ரிக் தொன் சீனி காணப்பட்டது.

2020 ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் 2021 ஜூன் 30ஆம் திகதி வரை, 584,000 மெட்ரிக் தொன் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது. உள்நாட்டின் மாதாந்தச் சீனித் தேவையின் அளவு 35,000 மெட்ரிக் தொன் ஆகும்.

இருப்பினும், வருடாந்தச் சீனித் தேவைக்கு மேலதிகமாகச் சீனி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது என்று, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. 

நாட்டுக்குள் சீனிக்குத் தட்டுப்பாடு நிலவுவதான மாயையை உருவாக்கி நுகர்வோரைச் சிரமத்துக்கு உட்படுத்தி அதிக விலைக்கு சீனியை விநியோகிக்கும் முயற்சியொன்று கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்டமையைக் காணக்கிடைத்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04