பொறுப்புக்கூறலில் வெளிப்படையற்ற தன்மையை காட்டுகிறது இலங்கை

Published By: Ponmalar

12 Sep, 2016 | 05:19 PM
image

(பா.ருத்ரகுமார்)

பொறுப்புக்கூறல் செயற்பாடுகளின் போது இலங்கை அரசாங்கத்தின் வெளிப்படையற்ற தன்மை மற்றும் மந்தகரமான நகர்வுகள் காரணமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் தற்போது கடும் அதிருப்தி நிலவுவதாக சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் குறித்த அமர்வின் போது விசேட அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுப்பெற்றிருந்தாலும் யுத்தத்திற்கு முன்னர், யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மற்றும் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் சர்வதேச சட்டத்திட்டங்களுக்கு அப்பாற்பட்ட வகையில் மிகவும் கொடூரமான யுத்தக்குற்றங்களும் மனித குலத்தக்கு எதிரான பல அநீதிகளும் இழைக்கப்பட்டுள்ளன.

இந்த வகையில் அக்குற்றங்கள் புரிந்தவர்களை இதுவரையில் கண்டறியப்படாமலுள்ளதோடு அவர்களுக்கான தண்டணையும் இதுவரையில் வழங்கப்படவில்லை என்பது வேதனையான விடயமாகும். மேலும் இலங்கை அரசாங்கத்தினால் 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் உறுதியளிக்கப்பட்ட நீதி, சுதந்திரம், உண்மையை கண்டறிதல், பாதுகாப்பு, மீள்நிகழாமை மற்றும் நல்லிணக்கம் போன்ற விடயங்கள் இதுவரையில் முழமையாக குறித்த மக்களுக்கு வழங்கப்படடடடவில்லை.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் உறுதியளித்த விடயங்களை உடன் அமுல்படுத்த இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும். குறித்த விடயங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற முன்வந்திருந்தாலும் இவ்விடங்கள் மிகவும் தாமதமாகவே நடைபெறுகின்றது அல்லது அவ்விடயங்களில் முன்னேற்றங்கள் மிகவும் அவசியமாகின்றது.

மேலும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான மக்களின் கருத்தக்களை அறிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் அந்த அமர்வுகளில் கலந்தக்கொண்டு கருத்து தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவ் அமர்வுகளில் கலந்துக்கொண்ட பாதிக்கப்பட்ட மக்களில் பலர் அரச படையினரால் அச்சுறுத்தப்பட்டள்ளனர்.

மேலும் போதியளவிலான வளங்கள் இன்மை. செயற்பாட்டத்தன்மையில் தெளிவின்மை போன்றவற்றினால் குறித்த மக்கள் அச்சமுற்றுள்ளனர். அத்தோடு பாதுகாப்பு பொறிமுறைகளை வலுப்படுத்தினால் மட்டுமே அம்மக்கள் தங்களது குறைகளை எவ்வித தயக்கமுன்றி முன்வைப்பதற்கும் பங்கெடுப்பதற்கும் முடியும். குறித்த விடயங்களை இலங்கை அரசாங்கம் நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் யுத்தத்தினால் காணாமல் போன உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் உண்மையை கண்டறிய நீதியான விசாரனை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் இலங்கை அரசாங்கத்தினால் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள தகவலறியும் சட்டமூலம் உண்மையான விடயங்களை வெளிக்கொணருவதில் எவ்வகையான செயற்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது அல்லது சமரசமான தீர்வுகளினடிப்படையில் குறித்த உண்மைகளை மறைத்து விடுமா என்பதிலும் மக்கள் பெரும் அச்சத்திலுள்ளனர்.

ஆத்தோடு காணாமல் போனோர் ஆணைக்குழவின் வரைபுகள் மற்றும் செயற்பாட்டுத்திறன் தொடர்பில் சந்தேகம் உள்ளது. ஆரசாங்கத்தின் அபிவிருத்தி உட்பட்ட பொறிமுறைகளின் நடைமுறைகளுக்கு காணாமல் போனோர் ஆணைக்குழவின் பரிந்துரைகள் பாடமாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08