சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது

Published By: Gayathri

01 Sep, 2021 | 02:43 PM
image

(எம்.மனோசித்ரா)

அழுத்கம மற்றும் மஹபாகே ஆகிய பிரதேசங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்புக்களில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அழுத்கம பொலிஸ் பிரிவில் கழுவாமோதர பிரதேசத்தில் களுத்துறை குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 135 லீற்றர் சட்ட விரோத மதுபானம் மற்றும் 5136 லீற்றர் கோடா என்பவற்றுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 55 வயதுடைய சந்தேகநபர் அழுத்கம பிரதேசத்தை சேர்ந்தவராவார். களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேபோன்று மஹபாகே பொலிஸ் பிரிவில் தொடுபல வீதி பகுதியில் மஹபாகே பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 33 லீற்றர் 750 மில்லி லீற்றர் சட்ட விரோத மதுபானம் மற்றும் 1295 லீற்றர் கோடா என்பவற்றுடன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 46 வயதுடைய மஹபாகே பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். மஹபாகே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38