மட்டக்களப்பில் 7 நாட்களில் 39 பேர் கொரோனாவுக்கு பலி - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் 

Published By: Digital Desk 4

31 Aug, 2021 | 09:52 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 7 நாட்களில்  கொரோனாவினால் 39 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து மட்டக்களப்பில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளதுடன் கடந்த 24 மணித்தியாலத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகததார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகததார சேவைகள் பணிமனையில் இன்று செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

காத்தன்குடி பிரதேச வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும். வவுணதீவு பிரதேச  வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவர் உட்பட இருவர் கடந்த 24 மணித்தியாலத்தில் உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 75 பேருக்கும், களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 78 பேருக்கும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 41 பேருக்கும்  பட்டிப்பளை, வவுணதீவு, ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா 100 வீதம் 30 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும், 

கோறளைப்பற்று மத்தி  சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், வாழைச்சேனை, கிரான், வாகரை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் வீதம் 3 பேர் உட்பட 257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டது.

இதேவேளை 20 வயது தொடக்கம் 40 வயதுவரை 9 பேரும், 40 வயது தொடக்கம் 60 வயதுவரை 66 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டோரில் 147 பேர் உட்பட  223 பேர் உயிரிழந்துள்ளதுடன் இவர்களில் 53 வீதம் ஆண்கள் ஆகும். 

இதுவரை 30 வயக்கு மேற்பட்ட முதலாவது தடுப்பூசி 93 வீதமானவர்களான 2 இலட்சத்து 70 ஆயிரம் பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி 39 வீதமான ஒரு இலட்சத்து 13 ஆயிரம் பேருக்கு ஏற்றப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37