தடுப்பூசியால் கொரோனா பரவலை  85 வீதத்தால் தவிர்த்துக்கொள்ள முடியும் - வைத்திய நிபுணர்கள்

Published By: Digital Desk 3

31 Aug, 2021 | 05:29 PM
image

(ஆர்.யசி )

நாட்டில் பரவிக்கொண்டுள்ள கொவிட்-19 வைரஸ் பரவளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இருக்கும் ஒரேதெரிவு தடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வது மட்டுமேயாகும். தடுப்பூசியை ஏற்றிக்கொண்டால் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு கொவிட் வைரஸ் பரவுவதை 85 வீதத்தால் தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் வைத்தியநிபுணர்கள் கூறுகின்றனர். 

இந்நிலையில்ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின்  பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர இது குறித்து கூறுகையில்,

உலகில் பயன்படுத்தப்படும் சகல அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளும் வைரஸ்பரவளில் இருந்து பாதுகாப்பை கொண்டுக்கின்றது. அதுமட்டும் அல்ல முறையாக இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்டால் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு வைரஸ் கடத்தப்படும் செயற்பாடும் 85 வீதத்தில்குறைவடைகின்றது என அவர் கூறினார். 

இது குறித்து இலங்கை வைத்தியர்கள்சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்னகூறுகையில்,

கொவிட் வைரஸ் பரவளில் இருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள எமக்கு இருக்கும் ஒரே தெரிவுதடுப்பூசிகளை ஏற்றிக்கொள்வதாகும். அதனையே சகலரும் வலியுறுத்தி வருகின்றோம். அதேபோல் எந்ததடுப்பூசி வேண்டும் என்ற தெரிவுகள் அவசியமற்றதாகும். மூன்றாம் தடுப்பூசி குறித்து உலக நாடுகள் கவனம்செலுத்தி வருகின்றனர். அது குறித்து நாம் அவதானம் செலுத்த வேண்டும். ஆனால் சகலருக்கும் மூன்றாம்தடுப்பூசி அவசியமாகுமா என்றால் அதற்கான தேவை இல்லை என்றே நான் கூறுவேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17