தனது பலவீனத்தை மூடி மறைக்க தொழிற்சங்கத்தினர் மீது குற்றம் சுமத்தும் அரசாங்கம் - முன்னிலை சோசலிச கட்சி

Published By: Gayathri

31 Aug, 2021 | 05:32 PM
image

(இராஜதுரை ஹஷான்)

போராட்டங்களினால் தான் கொவிட் வைரஸ் பரவல் தீவிரமடைந்தது என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. 

அரசாங்கம் தனது பலவீனத்தை மூடி மறைக்க போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிற்சங்கத்தினர் மீது குற்றம் சுமத்துகிறது என முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

முன்னிலை சோசலிச கட்சியின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கத்தின் தன்னிச்சையான செயற்பாட்டை கண்டித்து தொழிற்சங்கத்தினர் கடந்த காலங்களில் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அமைதியான போராட்டங்களை அரசாங்கத்தின்  பணிப்புரைக்கு அமைய  பாதுகாப்பு தரப்பினர் அமைதியற்ற போராட்டமாக மாற்றியமைத்தனர். அரசாங்கத்தின் சர்வாதிகார செயற்பாட்டை நீதிமன்றம் கண்டித்துள்ளது.

போராட்டத்தினால் தான்  கொவிட் தொற்று  பரவல் தீவிரமடைந்தது என்று அரசாங்கம் குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள  முடியாது. அதற்கான சாட்சியங்கள் ஏதும் கிடையாது.  

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிற்சங்கத்தின் தலைவரும், மாணவர்களும் சிறைச்சாலையில் இருக்கும்போதுதான்  கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான திட்டம் அரசாங்கத்தின் வசம் கிடையாது. அரசாங்கம் தனது பலவீனத்தை மூடி மறைக்க  தொழிற்சங்கத்தினர் மீது பழிசுமத்துகிறது.

கொவிட் வைரஸ் பரவலை அரசாங்கம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை  நாளாந்தம் அதிகரித்துள்ளது. 

இதற்கு எதிராக எழும் மக்களின் எதிர்ப்பினை அரசாங்கம் கொவிட் தாக்கத்தை குறிப்பிட்டுக் கொண்டு  முடக்குகிறது. நாட்டு மக்களில் முதலில் தெளிவுப் பெற வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58