மாளிகாவத்தை பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரிடமிருந்து 1.1 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர் மாளிகவத்தை பகுதியைச் சேர்ந்த 22 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த இளைஞரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்றுவருவதுடன், நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.