2.32 பில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் மீட்பு

Published By: Vishnu

31 Aug, 2021 | 08:54 AM
image

இலங்கை கடற்படையினரால் தெற்கு கடற்பரப்பில் நேற்று நடத்தப்பட்ட சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கையில் கடல் வழியாக நாட்டுக்குள் கடத்த முயன்ற சுமார் 290.200 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது 05 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், கடத்தல் முயற்சிக்கு பயன்படுத்தப்பட்ட படகொன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். 

இதேவேளை ஹெரோயின் மற்றும் சந்தேக நபர்களுடன் மீன்பிடி படகு இன்று அதிகாலை கரைக்கு கொண்டு வரப்பட்டது.

இலங்கை கடற்படை புலனாய்வு மற்றும் பிற புலனாய்வு சேவைகள் தலைமையிலான ஒருங்கிணைந்த புலனாய்வு நடவடிக்கையின் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், கடற்படை கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடி விசைப்படகை கண்டுபிடித்து சோதனையிட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 30 பிற்பகல் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 சாக்குகளில் அடைக்கப்பட்ட 259 பொதிகளில் சுமார் 290.200 கிலோ கிராம் ஹெராயினை மீட்டுள்ளனர்.

இவற்றின் பெறுமதி 2.32 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட்-19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் நெறிமுறைகளைப் பின்பற்றி இந்த விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அஹுங்கல்ல, பலபிட்டிய மற்றும் ஹபரதுவ ஆகிய பகுதிகளில் வசிக்கும் 31 முதல் 37 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09