ஏக்கல சந்தியில் பிரதேச மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம்  காரணமாக அப்பகுதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆர்பாப்பாட்டம் மினுவாங்கொடை - ஜா எல வீதியின் ஏக்கல சந்தியில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏக்கல பகுதிக்கு அருகில் உள்ள கைவிடப்பட்ட பிரதேசமொன்றில் குப்பைகளை கொட்டும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தே பிரதேச மக்கள் வீதியை மறைத்து ஆர்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன் காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்தமாறு போக்குவரத்து பொலிஸார் கோரியுள்ளனர்.