அரசியல் கைதிகளின் விடுதலை மூலம் தமிழர்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம் - அருட்தந்தை சத்திவேல் 

Published By: Digital Desk 2

30 Aug, 2021 | 01:26 PM
image

எங்களுடைய பிள்ளைகளோடு  இருந்து எங்களை சாக விடுங்கள்  என அரசியல் கைதிகளுடைய பெற்றோர்கள் கூறியதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளுடைய தற்போதைய நிலவரம் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் கொரோனா  தொற்றும், மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றன. இந்த நிலையில் அரசியல் கைதிகளுடைய பெற்றோர்கள், எங்களுடைய பிள்ளைகளை நீண்ட  நாட்களாக காணமுடியாமல் இருக்கின்றது.

அவர்களுடைய முகங்களை நாங்கள் பார்ப்போமா?என்று தெரியாமல் இருக்கின்றது என கூறுகின்றனர்.

ஏனெனில், வயது முதிர்ந்த  நிலையில் பிள்ளைகளின் கவலையோடு இருப்பவர்கள், கொரோனா தொற்றுக்குள்ளாக கூடிய சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

இந்த நிலையில் தான் பெற்றோர் இவ்வாறு கூறுகின்றனர். இந்த ஆதங்கம் அரசாங்கத்திற்கு எட்டப்போவதில்லை. ஏனென்றால் அண்மையிலே ஜனாதிபதி ஒரு குழுவினை அமைத்திருக்கின்றார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள்  தொடர்பாக ஒரு குழு அமைத்து, அவர்களுடைய ஆலோசனை பெற்று அதன்பின் நிறைவேற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. அவர்களை ஏமாற்றுவதற்காக தான் இந்த குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

எனவே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுகின்ற அதேநேரம், தற்போது இருக்கின்ற சூழ்நிலைக்கு கீழே இவர்கள் விடுதலை செய்வதற்கு ஊடாக தமிழ் மக்கள் மத்தியிலே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கலாம் என்று நாங்கள்  நினைக்கின்றோம்” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14